என் மலர்

  சினிமா செய்திகள்

  சுந்தர் சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
  X

  சுந்தர்.சி

  சுந்தர் சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னணி இயக்குனரான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை-3 ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
  • தற்போது இவர் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  முன்னணி நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாம் பூச்சி'. இப்படத்தில் ஜெய், ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பத்ரி இயக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி டெலி மீடியா தயாரித்துள்ளது.

  பட்டாம் பூச்சி

  நவ்நீத் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சைக்கோ த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

  சமீபத்தில் இப்படம் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×