படப்பிடிப்பை நிறைவு செய்த சுந்தர்.சி

சுந்தர்.சி தற்போது தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.
சுந்தர்.சி
சுந்தர்.சி
Published on

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைநகரம் 2
தலைநகரம் 2

தலைநகரம் 2

அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

தலைநகரம் 2
தலைநகரம் 2

தலைநகரம் 2

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com