search icon
என் மலர்tooltip icon
    • 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்
    • மோட்டார் சைக்கிள், மது பாட்டில்கள் பறிமுதல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன், நெடுஞ்செழியன், பழனி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் அதிரடி கள்ளச்சாராய சோதனை நடத்தினர்.

    அப்போது கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த தனகொண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்த மரியா (வயது 65), சேட்டு (75), அன்பு (65), பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (32), கோமதி (32), சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40), மோர்தானா ஜங்காலப்பல்லி பகுதியை சேர்ந்த அமுதா (38), எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (43), மோர்தானா கிராமத்தைச் சேர்ந்த திலகா (40), பொட்டியம்மாள் (67), வேலு (38) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்.

    அதேபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அதிரடி சாராய சோதனை செய்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் சுமார் 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்த நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் டவுன் போலீசார் மது பாட்டில்கள் விற்றதாக குடியாத்தம் அடுத்த லக்ஷ்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 18 பேர் பணியிட மாறுதல் பெற்றனர்
    • பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத்துவதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது

    வேலுார்:

    தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், உயர்நிலை, மேல்நிலைப்பள் ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் களுக்கு பதவி உயர்வுக்கான அறிவிப்பு இன்றி, கலந்தாய்வு நடக்கிறது.

    அதேநேரம், பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத் துவதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது. அப்படி இருக்கும் போது, எப்படி பணியிடமாறுதல் கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    அதற்கு ஏற்றவாறு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்க ளுக்கு, மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவ தற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

    ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் போதுமான அளவுக்கு காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் ஏமாற்றத்து டன் திரும்பிச்சென்றனர்.

    இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, வேலுார்-24, திருவண்ணா மலை - 41,திருப்பத்துார்-16, ராணிப்பேட்டை-31 என்று அரசு மேல்நிலைப்பள்ளி களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

    மொத்தமாக, தமிழகம் முழுவதும் 670 மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணி யிடங்களை நிரப்புவதற்கு, முதுகலை ஆசி ரியர்களுக்கு தலைமைஆசிரியர் களாக பதவி உயர்வு வழங்கியி ருந்தால், காலிப்பணி யிடங்கள் உருவாகி இருக்கும்.

    ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொ ள்ளாமல், முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர்.

    பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தியதால், காலிப்பணியி டம் இன்றி மாறுதல் பெற முடி யாமலும், பதவி உயர்வு கிடைக் காமலும் முதுகலை ஆசிரியர் கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேலும், வேலுார் மாவட் டத்தில் கணக்குப்பதிவியல்-4, வணிகவியல்-1, இயற்பியல் -3, தமிழ்-3, ஆங்கிலம்-3, விலங்கியல்-2, கணிதம்-1, வரலாறு-2, உடற்கல்வி இயக் குனர்-2 என மொத்தம் 21 காலிப்பணியிடங்களுக்கு கலந் தாய்வு நேற்று நடந்தது.

    18 பேர் மட்டுமே மாறுதல்

    இதற்காக, 203 முதுகலை ஆசிரி யர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 18 பேர் மட்டுமே பணியிட மாறுதல் பெற்றனர். மீதமுள்ள வர்கள், தங்களுக்கான பாடங்களில் காலிப்ப ணியிடங்கள் இல்லாத நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது
    • 6 குழுக்கள் அமைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் சுமார் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த வனச்சரகத்தில் உள்ள பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வீ.டி.பாளையம், கொத்தூர், கதிர்குளம், கல்லப்பாடி, சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, மோடிகுப்பம், சேங்குன்றம், கொட்டாரமடுகு, உள்ளிட்ட கிராமங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    வனச்சரகத்தில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுக்குமாறு தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் யானைகளை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

    அதன் பேரில் குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள தனகொண்டபல்லி பீட், கொட்டமிட்டா பீட், சைனகுண்டா பீட், மோர்தானா பீட் ஆகிய பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாட்கள் காலை முதல் மாலை வரை வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் யானைகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    • பல்லக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இவ்விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று இரவு குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது. 

    பல்லக்கில் அமைக்கப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்களில் அம்மனை வழிபட்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கௌரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழு சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல் குடியாத்தம் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் 67-ம் ஆண்டு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது குடியாத்தம் கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. 

    இந்தப் பல்லக்கில் சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்ட அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து புற்று அம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் நாராயணசாமி பொருளாளர் பாலையா, செயலாளர் சந்திரசேகர், கவுரவ தலைவர் லோகநாதன் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    குடியாத்தம் அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது. 

    இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்

    குடியாத்தம் நகரில் 3 புஷ்ப பல்லக்கில் உலா வந்ததை காண குடியாத்தம் நகர மற்றுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிர க்கணக்கான பொது மக்களும், திருவிழாவுக்காக உறவினர் வீடுகளுக்கு வந்தவர்களும் தரிசனம் செய்தனர். மின் பணியாளர்கள் பூ பல்லக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பூப்பல்லக்கு சென்றபின் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக இணைத்தனர்.

    • 2 ஆயிரம் ஆண்டு பழமையானது
    • 11 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உமாமகேஸ்வரி உடனுறையான கைலாயநாதர் கோவில் உள்ளது.

    இங்கு அனைத்து வகையான பிரதோஷங்கள், அமவாசை, பவுர்ணமி, போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைப்பெறுவது வழக்கம்.

    இதனை தொடர்ந்து இந்த மாதத்தில் நேற்று பிரதோஷம் என்பதால் கைலாயநாதருக்கு பால், தேன், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட 11 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கைலாயநாதருக்கும் உமா மகேஷ்வரிக்கும் சிறப்பு ஆதியோகி அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனை பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அணைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சிகரெட் தீ படுக்கையில் பற்றி எரிந்தது
    • புகை மூச்சு திணறி இறந்தார்

    வேலூர், மே.16-

    வேலூர், தோட்டப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

    மேலும் லாட்ஜை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். விக்னேஷ் நேற்று மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார்.

    அப்போது சிகரெட் பிடித்தபடி தூங்கியதாக கூறப்படுகிறது. தூக்க கலக்கத்தில் விக்னேஷ் சிகரெட்டை படுக்கையில் போட்டுள்ளார்.

    அப்போது சிகரெட் மெத்தையில் பட்டு தீப்பிடித்து புகை வந்து அறை முழுவதும் பரவியது. மது போதையில் இருந்ததால் விக்னேஷ்விற்கு புகை சூழ்ந்தது தெரியவில்லை.

    அறைக்கு வெளியேயும் புகை வந்ததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார்.

    அறை முழுவதும் புகைப்பரவி விக்னேஷ் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷுக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர்.

    • வேலூரில் குடிநீர் கேட்டு கோஷம்
    • 5 ஆண்டுகளாக அவதி

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 5 ஆண்டுகளாக 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

    இதனால் சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் இடத்தில் இருந்து குடிநீரை பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து குடியிருப்பு வாசிகள் மொட்டை மாடியில் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி விட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 தமிழக அரசு வழங்க வேண்டும்
    • அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் சம்பத் வரவேற்பு உரையாற்றினார்.இந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுச் செயலாளர் மகேஷ் கண்டன உரையாற்றினார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் கியாஸ் வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல் ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு மிகவும் சிரமப்பட்டு பதிய வேண்டியிருக்கிறது.

    எனவே ஆன்லைன் பதிவினை எளிதாக பதிய ஆவணம் செய்ய வேண்டும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போக்குவரத்து விதி மீறல் செய்தால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து ஆட்டோ டிரைவர் கையெழுத்துடன் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாநில செயலாளர் இந்து வழக்கறிஞர் முன்னணி ரத்தின குமார், இந்து ஆட்டோ முன்னணி மாநில பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 988 பாட்டில்கள், ரூ.76 ஆயிரம் பறிமுதல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

    குடியாத்தத்தில் சில இடங்களில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் சுண்ணாம்பேட்டை ஆற்று ஓரம் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியபடி உள்ள பாரில் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 520 மது பாட்டில்களும், மது விற்ற ரூ.73 ஆயிரத்து 660 இருந்தது.

    இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 38) செவ்வாய்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் தனிப்படை போலீசார் குடியாத்தம் காந்திநகர் சிவமதி கார்டன் ஆர்டிஓ அலுவலகம் ரோடு பகுதியில் வசித்து வரும் கிரிபிரசாத் (34) என்பவர் வீட்டின் பின்புறம் போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 468 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அவரிடம் இருந்து ரூ.2750-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் கிரிபிரசாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50) டிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பெருமாள் நேற்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாள் பிணத்தை மிட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • 2 பேர் தப்பி ஓட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நாகநதி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையை செலுத்தி வந்தனர். அந்த பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை காளியம்மன் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கோவில் உண்டியலை உடைத்தனர்.

    பக்கத்து வீட்டை சேர்ந்தவர் உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 3 பேர் உண்டியலை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.

    இவரது சத்தம் கேட்ட கிராம மக்கள் திரண்டு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட 3 பேரும் அங்கிருந்து பக்கத்தில் உள்ள தோட்டத்திற்குள் தப்பி ஓடினர்.

    விடாமல் துரத்திச் சென்ற பொதுமக்கள் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் சிக்காமல் தப்பி சென்றனர். பிடிப்பட்ட கொள்ளையனை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் வேலூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • சிறுவர், சிறுமி உட்பட 5 பேர் படுகாயம்
    • பட்டாசுகள் வெடிக்கும் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் மீது வெடித்த பட்டாசுகள் விழுந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின்போது சிரசு திருவிழாவின் இரவு நிகழ்ச்சியாக கண் கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இதில் பல வண்ணங்களில் பல விதங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படும்.

    இதைக் காண குடியாத்தம் நகரை மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் இரு பக்க கரைகளிலும் மணி கணக்கில் காத்திருந்து வானவேடிக்கையை கண்டு ரசித்துச் செல்வார்கள் வழக்கம் போல் நேற்று இரவு சிரசு கோவிலில் இருந்து புறப்பட்டதும் வான வேடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

    அப்போது பட்டாசுகள் வெடிக்கும் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் மீது வெடித்த பட்டாசுகள் விழுந்து உள்ளது.

    இதில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (வயது 26), ரித்தீஷ் (17), பிரவீன் (18), கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (13), தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பூர்ணிமா (13) உள்ளிட்ட 5 பேர் பட்டாசு விபத்தில் காயமடைந்தனர்.

    உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×