search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாராய வேட்டையில் 12 பேர் கைது
    X

    சாராய வேட்டையில் 12 பேர் கைது

    • 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்
    • மோட்டார் சைக்கிள், மது பாட்டில்கள் பறிமுதல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன், நெடுஞ்செழியன், பழனி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் அதிரடி கள்ளச்சாராய சோதனை நடத்தினர்.

    அப்போது கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த தனகொண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்த மரியா (வயது 65), சேட்டு (75), அன்பு (65), பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (32), கோமதி (32), சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40), மோர்தானா ஜங்காலப்பல்லி பகுதியை சேர்ந்த அமுதா (38), எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (43), மோர்தானா கிராமத்தைச் சேர்ந்த திலகா (40), பொட்டியம்மாள் (67), வேலு (38) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்.

    அதேபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அதிரடி சாராய சோதனை செய்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் சுமார் 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்த நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் டவுன் போலீசார் மது பாட்டில்கள் விற்றதாக குடியாத்தம் அடுத்த லக்ஷ்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×