என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பு கொடியுடன் மாடியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்பு வாசிகள்.
அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று போராட்டம்
- வேலூரில் குடிநீர் கேட்டு கோஷம்
- 5 ஆண்டுகளாக அவதி
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 5 ஆண்டுகளாக 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.
இதனால் சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் இடத்தில் இருந்து குடிநீரை பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து குடியிருப்பு வாசிகள் மொட்டை மாடியில் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி விட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






