search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surprise check"

    • தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர்.
    • கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்திவேலூரில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் பரமத்திவேலூர் 4 ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்களில் உணவு தயாரித்து விற்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து ரூ.2 ஆயி ரம் அபராதம் விதித்தார்.

    மேலும் உணவு பாது காப்பு விதிமுறைப்படி உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என ஓட்டல் கடை மற்றும் பாஸ்ட் புட் உணவு தயாரிக்கும் கடை உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதி களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாது காப்பு துறை அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.

    • பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் தயாரிப்பு தேதி இல்லாத பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற தண்ணீரில் திண்பண்டங்கள் தயாரிப்பதாகவும் புகார் எழுந்தது.பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மேற்கொண்ட ஆய்வில் தயாரிப்பு தேதி இல்லாமல் திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பேக்கரி கடைக்கு நோட்டீஸ் வழங்கி, சுகாதாரமற்ற 4 கிலோ திண்பண்டங்களை பறி முதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் சுகாதாரமற்ற முறை யில் பேக்கரிகளில் திண்பண் டங்கள் தயாரிப்பது மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.
    • 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ், பப்ஸ் தயாரிப்பு கடைகளில் பிளாஸ்டிக் மூலம் தயாரி க்கப்பட்ட முட்டைகளால் பப்ஸ் வகைகள் தயாரி க்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.

    ஆய்வில் பப்ஸ் வகை களை உரிய முறையில் தயாரி க்காமல் முட்டை வெளியே தெரியும்படி மைதா மாவில் தயாரிக்க ப்படும் பப்ஸ் வகைகளை தொடர்ந்து ஓவனில் வைத்து சூடேற்றும் பொழுது முட்டையின் வெள்ளை கருவானது தொடர்ந்து சூடேறி பிளாஸ்டிக் போன்று கெட்டியாகி விடுகிறது.

    அவ்வாறு தயாரிக்காமல் உரிய முறையில் உணவு பாதுகாப்பு விதிகளின்படி உரிய முறையில் முட்டை முழுவதுமாக மூடி உள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.மேலும் பப்ஸ் வகைகள் மற்றும் எண்ணெய் பல காரங்களை பேப்பரில் வைத்து பொதுமக்களுக்கு உண்ண கொடுத்ததற்காக 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாலித்தீன் கவர்களில் சூடான டீயை பார்சல் செய்து கொடுக்க கூடாது எனவும், அலுமி னியம் பாயில் கவரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    இதனை மீறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், கேரி பேக்குகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இது சம்பந்தமான புகார்களை 9444042323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • 988 பாட்டில்கள், ரூ.76 ஆயிரம் பறிமுதல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

    குடியாத்தத்தில் சில இடங்களில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் சுண்ணாம்பேட்டை ஆற்று ஓரம் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியபடி உள்ள பாரில் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 520 மது பாட்டில்களும், மது விற்ற ரூ.73 ஆயிரத்து 660 இருந்தது.

    இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 38) செவ்வாய்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் தனிப்படை போலீசார் குடியாத்தம் காந்திநகர் சிவமதி கார்டன் ஆர்டிஓ அலுவலகம் ரோடு பகுதியில் வசித்து வரும் கிரிபிரசாத் (34) என்பவர் வீட்டின் பின்புறம் போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 468 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அவரிடம் இருந்து ரூ.2750-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் கிரிபிரசாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கர்நாடக போலீசார் நடவடிக்கை
    • கர்நாடக போலீசார் நடவடிக்கை

    ஆம்பூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டி எச்.ஆர். எஸ். லே-அவுட் பகுதி போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் நேற்று ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் ஆம்பூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் ஆம்பூர் தாலுகா கீழ் முருங்கை பகுதியில் உள்ள நகை அடகு கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு திருட்டு நகைகளை அடமானம் வைத்ததை மீட்டனர். அதே போன்று ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகைகளை மீட்டனர். இந்த நகை அடகு கடையில் அடகு வைத்த 2 பேரை கைது செய்து கர்நாடகா போலீசார் அழைத்து சென்றனர்.

    அவர்கள் வடபுதுப்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 25) அவரின் நண்பர் வைத்தனாகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (26) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×