search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை
    X

    சென்னிமலை பஸ் நிலையம் எதிரில் உள்ள பேக்கரியில் முட்டை பப்சினை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை செய்தார்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.
    • 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ், பப்ஸ் தயாரிப்பு கடைகளில் பிளாஸ்டிக் மூலம் தயாரி க்கப்பட்ட முட்டைகளால் பப்ஸ் வகைகள் தயாரி க்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.

    ஆய்வில் பப்ஸ் வகை களை உரிய முறையில் தயாரி க்காமல் முட்டை வெளியே தெரியும்படி மைதா மாவில் தயாரிக்க ப்படும் பப்ஸ் வகைகளை தொடர்ந்து ஓவனில் வைத்து சூடேற்றும் பொழுது முட்டையின் வெள்ளை கருவானது தொடர்ந்து சூடேறி பிளாஸ்டிக் போன்று கெட்டியாகி விடுகிறது.

    அவ்வாறு தயாரிக்காமல் உரிய முறையில் உணவு பாதுகாப்பு விதிகளின்படி உரிய முறையில் முட்டை முழுவதுமாக மூடி உள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.மேலும் பப்ஸ் வகைகள் மற்றும் எண்ணெய் பல காரங்களை பேப்பரில் வைத்து பொதுமக்களுக்கு உண்ண கொடுத்ததற்காக 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாலித்தீன் கவர்களில் சூடான டீயை பார்சல் செய்து கொடுக்க கூடாது எனவும், அலுமி னியம் பாயில் கவரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    இதனை மீறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், கேரி பேக்குகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இது சம்பந்தமான புகார்களை 9444042323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×