பரமத்திவேலூர் பேக்கரி கடைகளில்உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் திடீர் சோதனை

பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர் பேக்கரி கடைகளில்உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் திடீர் சோதனை
Published on

பரமத்தி வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் தயாரிப்பு தேதி இல்லாத பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற தண்ணீரில் திண்பண்டங்கள் தயாரிப்பதாகவும் புகார் எழுந்தது.பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மேற்கொண்ட ஆய்வில் தயாரிப்பு தேதி இல்லாமல் திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பேக்கரி கடைக்கு நோட்டீஸ் வழங்கி, சுகாதாரமற்ற 4 கிலோ திண்பண்டங்களை பறி முதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் சுகாதாரமற்ற முறை யில் பேக்கரிகளில் திண்பண் டங்கள் தயாரிப்பது மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com