search icon
என் மலர்tooltip icon
    • மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
    • வாசல் திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை உள்ளே சென்றன.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது.

    மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

    தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

    அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர்.

    40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டி ருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்ப ட்டுள்ளது.

    இதில் தம்பி ரான் சுவாமிகள் மற்றும் கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், உபயதாரர் முரளிதரன், வர்த்த த சங்க செயலாளர் துரை, திருமு ல்லை வாசல் கணேஷ், ரவிச்சந்தி ரன், பொறியாளர் செல்வ குமார், முன்னா ள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    • அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர், வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகிய நாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தி யன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீ ஸ்வரர் கோவில், வெள்ளப்ப ள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வ ரமுடையார் கோவில், அகரம் அழகிய நாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில் குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரரோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×