search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா"

    • அமெரிக்கா, தென்கொரியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    பியாங்யாங் :

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இதனை பொருட்படுத்தாமல் கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பொருந்தாத எந்தவொரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால், அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என கூறப்பட்டுள்ளது.

    • தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தவேண்டும் என அமெரிக்காவை வடகொரியா எச்சரித்தது.
    • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    சியோல்:

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    ஆனாலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கடல் பகுதியை நோக்கி சீறிப் பாய்ந்ததாக தெரிவித்தது.

    • ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது.
    • வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து தகவல் இல்லை.

    • வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தகவல்
    • அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் தென் கொரிய ராணுவம்.

    டோக்கியோ:

    அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 


    இந்நிலையில் வட கொரியா மீண்டும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதன் கிழக்குக் கடல் பகுதியில் ஏவியது. அந்த ஏவுகணைகள் ஜப்பான் கரையோர பகுதியில் கீழே விழுந்ததாக அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவுறுத்தி உள்ளார்.

    சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யவும், எந்தவொரு தகவலையும் மக்களுக்கு விரைவாகத் தெரிவிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா ஏவுகணை வீச்சு தொடர்வதால் ஜப்பானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அச்சுறுத்தலால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. 

    • வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
    • அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.

    சியோல்:

    வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்று முன்தினம் அதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

    இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது என தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • வடகொரியா நேற்று காலை ஜப்பான் மீது ஏவுகணையை வீசியது.
    • இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் ஆலோசித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. இதன்படி ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1-ம் தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, வடகொரியா நேற்று காலை மீண்டும் ஜப்பான் மீது ஏவுகணையை வீசியது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை கூறுகையில், இருநாட்டு தலைவர்களும் கூட்டாக ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்தனர். ஏவுகணை ஏவுதல் ஜப்பானிய மக்களுக்கு ஆபத்தானது, பிராந்தியத்தை சீர்குலைக்கும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை தெளிவாக வடகொரியா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.

    • ஜப்பான் நாட்டின் மீது பறந்த ஏவுகணையால் ஜப்பான் அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
    • வடகொரியா இன்று ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.

    வாஷிங்டன் வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது.

    2017ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவப் பயிற்சிக்கு மத்தியில், 10 நாட்களில் தென்கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது.

    தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் கூறியதகவல்படி, ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்- ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் (2,858 மைல்கள்) பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்ததோடு, வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை "மோசமானது" என கூறினார்.

    ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜப்பான் கூறியது. வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புவதால், எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த விருப்பங்களையும் நிராகரிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறினார்.

    தென் கொரியா தனது இராணுவத்தை மேம்படுத்துவதாகவும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கூறி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் கூறியதாவது;- ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த நடவடிக்கை ஸ்திரமின்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை வடகொரியா அப்பட்டமாக புறக்கணிப்பதை காட்டுகிறது என கூறி உள்ளார். வடகொரியா இன்று ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.

    • வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
    • இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    வாஷிங்டன்:

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வரையில் 3 முறை மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    வடகொரியா இப்படி தனது அடாவடி போக்கை தொடர்ந்தால் அந்த நாடு மிகவும் பயங்கரமான பதிலடியை எதிர்கொள்ளும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் எச்சரித்துள்ளார்.

    இதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் சட்ட விரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு முற்பட்டால் அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான பதிலடியை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.
    • வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

    டோக்கியோ:

    தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

    இந்நிலையில், வட கொரியா மேலும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது என ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு நேற்று வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.
    • எந்த வகையான ஏவுகணையை வடகொரியா ஏவியது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    சியோல்:

    தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல், கூட்டு ராணுவ பயிற்சிக்காக தென் கொரியாவுக்கு வந்தடைந்ததால் வடகொரியா மேலும் ஆத்திரமடைந்துள்ளது. எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.

    இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியாவிற்கு வந்துவிட்டு, விமானம் மூலம் வீடு நாடு திரும்பிய பின்னர், இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

    எந்த வகையான ஏவுகணையை வடகொரியா ஏவியது? எவ்வளவு தூரம் பறந்தது? என்பதை தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

    ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டதை கண்டுபிடித்ததாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது.
    • வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சியோல்:

    ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அரசாங்கம் அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்த சோதனை செய்கிறது. குறிப்பாக, எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையானது கடுமையான ஆத்திரமூட்டல் என்று தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுவதாகவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகளம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • வடகொரியாவுக்கும், அமெரிக்கா- தென் கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது.
    • கிம் ஜாங் அன் சமீப காலமாக மக்கள் ஆதரவை திரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சியோல் :

    வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும், அண்டை நாடான தென் கொரியாவுக்கும் இடையேயான உறவில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இடையில் ஒரு திருப்புமுனையாக இரு கொரியாக்கள் இடையேயான உறவில் ஒரு சுமூக நிலை உருவானது. தென்கொரியா ஏற்பாட்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் முதன்முதலாக சிங்கப்பூரில் 2018-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    உலகமே உன்னிப்பாக கவனித்த அந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமில்லா பிரதேசமாக மாற்ற ஒரு உடன்பாடு கையெழுத்தானது. அதன்பின்னர் இரு தரப்புக்கும் இடையேயான உறவில் சின்னதாய் ஒரு மாற்றம் பளிச்சிட்டது. ஆனால் டிரம்புக்கும், கிம் ஜாங் அன்னுக்கும் இடையே வியட்னாம் நாட்டில் ஹனோய் நகரில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27, 28-ந் தேதிகளில் நடந்த பேச்சு வார்த்தை பாதியிலேயே முறிந்து போனது. இதன் முறிவுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம் சாட்டின.

    அதைத் தொடர்ந்து நிறுத்தி வைத்திருந்த கண்டம் விட்டு கண்டம்பாயும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மீண்டும் தொடங்கியது. அது மட்டுமின்றி அந்த நாடு மீண்டும் அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    அதன் பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை முடங்கிப்போனது. தென்கொரியாவுடனும் வடகொரியா இணக்கமாக இல்லை. ஆனால் அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராகவும், தென் கொரியாவில் யூன் சுக் யோல் அதிபராகவும் வந்துள்ளனர். இருப்பினும் அவ்விருநாடுகளுடனான வடகொரிய உறவில் பெரிதான மாற்றம் இல்லை. அவ்விரு நாடுகளும் மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு அழைப்பு விடுத்தபோதும், வடகொரியா அதை நிராகரித்து விட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரியப்போரின் 69-வது ஆண்டு நிறைவு நாள்விழாவில் போர் வீரர்கள் மத்தியில் வடகொரிய தலைவர் கிம்ஜாங் அன் ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு நெருக்கடிக்கும் பதில் அளிக்கக்கூடிய முழுமையான நிலையில் நமது ஆயுதப்படைகள் இருக்கின்றன. மேலும் நமது நாட்டின் அணு ஆயுதப்போரைத் தடுப்பது, அதன் முழு ஆற்றலை கடமையாகவும், சரியாகவும், விரைவாகவும் அணி திரட்ட தயாராக உள்ளன. அமெரிக்கா, தென்கொரியாவுடன் ராணுவ மோதல்கள் வந்தால் வடகொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்.

    அமெரிக்கா தனது விரோதக்கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு, வடகொரியாவை பேய்த்தனமாக காட்டுகிறது. அமெரிக்காவின் இரட்டை நிலையையும், குண்டர்கள் போன்ற நிலையையும்தான் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு போர் பயிற்சிகள் காட்டுகின்றன.

    தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் யோல் மோதல் வெறி பிடித்தவராக உள்ளார். அவர் கடந்த கால தென்கொரிய அதிபர்களை விட அதிகமாக சென்று விட்டார். மேலும் அவரது பழமையவாத அரசானது, குண்டர்களால் வழிநடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் பதவிக்கு வந்தது முதல் அவரது அலுவலகம், அந்த நாடு அமெரிக்காவுடன் ராணுவ கூட்டணியை வலுப்படுத்தவும், முன் எச்சரிக்கை தாக்குதல் திறன் மற்றும் வடகொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை வீழ்த்தும் திறனை அதிகரிக்கவும் நகர்ந்துள்ளது.

    அவர்கள் மிகவும் அஞ்சும் முழுமையான ஆயுதங்களை வைத்துள்ள நமது நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை பற்றி பேசுவது என்பது அபத்தமானது. அது மிகவும் ஆபத்தான தற்கொலை நடவடிக்கை ஆகும். அத்தகைய ஆபத்தான முயற்சி நமது வலிமையான பலத்தால் உடனடியாக தண்டிக்கப்படும். மேலும் யூன் சுக் யோல் அரசும், அவரது ராணுவமும் அழிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், இந்த ஆண்டு தொடர்ந்து அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுத்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம், வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் வந்தால் அது முன்கூட்டியே அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியும். அவை போர் தடுப்பு என்ற ஒற்றைப்பணிக்கு ஒருபோதும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று எச்சரித்தார்.

    கொரோனா பெருந்தொற்றுநோயால் எல்லைகள் மூடலாலும், அமெரிக்கா மறும் அதன் கூட்டணிநாடுகளின் பொருளாதார தடைகளாலும், தனது சொந்த நிர்வாகத்தாலும் பொருளாதாரம் மேலும் பாதித்துள்ள நிலையில், கிம் ஜாங் அன் சமீப காலமாக மக்கள் ஆதரவை திரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×