search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசந்த உற்சவம்"

    • இந்த உற்சவம் வரும் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    • 9 நாட்களும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த உற்சவம் வரும் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருவார்.

    அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுவார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்த உற்சவ திருவிழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாளன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வசந்த உற்சவ விழா ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சுவாமி, அம்மனுக்கு 16 விதமான தூப தீபாராதனைகள் நடைபெற்றது.

    பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கி வரும் ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று சுவாமி, அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தண்ணீரால் சூழப்பட்ட மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுந்தருளினர்.

    அங்கு சுவாமி, அம்மனுக்கு 16 விதமான தூப தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து இரவு 8 மணிக்கு சுவாமியும், அம்மனும் புறப்பட்டு உற்சவ மண்டபத்தை சென்றடைந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.
    • இந்த விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகாசி மாதம் வசந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்வு நடைபெறும், இதில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் சகல பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும்.

    தொடர்ந்து விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.. இந்த விழாவில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி அங்குள்ள ஆடி வீதிகள், வழியாக, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • இத்திருவிழா 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 2-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நேற்று தொடங்கியது. இத்திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டத்திற்கு எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகியது. பின்னர் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை சுற்றி வலம் வந்தார் வந்தார். பின்னர் சுவாமிக்கு அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். வசந்த திருவிழா நிறைவு நாளான 10-ம் நாள் ஜூன் 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

    • வசந்த உற்சவம் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ந்தேதி சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடக்கும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்று அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி வெட்டப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    மேலும் இந்த மண்டபத்தில் புராண கதைகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைத்த சிலைகள், எங்கும் காணமுடியாத சிவனின் திருவிளையாடல் புராணத்தை விளக்கும் சிலை வடிவங்கள், நாயக்கர் காலத்தை சிறப்பிக்கும் வகையில் செதுக்கப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. திருமலைநாயக்கர் காலத்தில் இருந்து வசந்த உற்சவம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    திருவிழா நாட்களை தவிர இந்த மண்டபம் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. பின்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது. வணிக மண்டபமாக மாறியதால் அங்குள்ள சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது.

    எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 2-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். மேலும் மண்டபத்தை சுற்றி கடந்த ஆண்டு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் இந்தாண்டு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பணிகள் நடப்பதால் தண்ணீர் நிரப்பப்பட வில்லை. மேலும் அரசு உத்தரவின்படி புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் அடுத்தாண்டு தண்ணீர் நிரப்பி திருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 6-ந்தேதி விசேஷ திருமஞ்சனம், புஷ்ப பந்தலில் அருள்பாலித்தல் நடக்கிறது.
    • 28-ந்தேதி காய்கறி பந்தலில் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பஞ்சவடியில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பட்டாபிஷேக ராமனாக காட்சியளித்து அருள்பாலித்து வரும் ஸ்ரீசீதா தேவி சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வசந்த உற்சவ விழா வசந்த மண்டபத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், புஷ்ப பந்தலில் அருள்பாலித்தல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5 மணிக்கு விசேஷ பழப்பந்தலிலும், 28-ந்தேதி காய்கறி பந்தலிலும் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறுகிறது
    • 26-ந்தேதி அன்று மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் எனும் வசந்த உற்வசம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர் பொதுஜன சேவை முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இ்ந்தநிலையில் நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபம் சேர்ந்தார். அங்கு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்யப்பட்டு தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

    இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. பின்னர் இரவு 8.45 மணிக்கு தாயார் வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். வருகிற 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறுகிறது. 26-ந்தேதி அன்று மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் என்ற வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடானார்.

    மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவத்தில் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவமும், வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவமும் நடைபெறும்.

    • இன்று முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும்.
    • 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இன்று (புதன்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளல், இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி, இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடு, 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.

    அதேபோல் வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும். அப்போது, மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகிறார். 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளும் தாயாருக்கு, 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீதாயார் உள்கோடை மண்டபம் சேருகிறார்.

    6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷடி, 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.45 மணிக்கு ஸ்ரீதாயார் மண்டத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருகிறார். வருகிற 26-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது.

    • திருமங்கை ஆழ்வார் நந்தவனத்தில் எழுந்தருளினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இங்கு யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் சன்னதி உள்ளது.

    திருமங்கை ஆழ்வார் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். மேலும், பஞ்ச நரசிம்மர் கோவில்களில் இரணியன் நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் சுவாமிகள் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் நந்தவனத்தில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் பாராயணம் செய்தனர். இதை அடுத்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அக்னி நட்சத்திரம் முடியும் வரை நந்தவனத்தில் பக்தர்களுக்கு பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் காட்சியளிக்கின்றனர்.

    • வசந்தோற்சவம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • நாளை தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    முதல் 2 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மற்றும் 3-வதுநாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் மற்றும் ருக்மனி, சத்தியபாமா சமேத கிருஷ்ணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர்.
    • நெய் தீபம், கற்பூர ஆரத்தி காண்பித்தும் பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை தங்கத் தேரோட்டம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி பங்கேற்று தங்கத் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர்.

    உற்சவர் பத்மாவதி தாயார் தங்கம், வைர ஆபரணங்கள், பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேங்காய் உடைத்தும், நெய் தீபம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.

    தேரோட்டத்தில் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பிற கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×