search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள்"

    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம்,
    • களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியின் ஓட்டுநர் மனோகரன்(55) படுகாயம் அடைந்தார்.
    • விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையம் பகுதியில் பாண்டிச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் துகள்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று பல்லடம் நோக்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது பனப்பாளையம் பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த லாரி மேற்கிலிருந்து கிழக்காகச் செல்ல முற்பட்டது. எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பிளாஸ்டிக் துகள்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் ஓட்டுநர் மனோகரன்(55) படுகாயம் அடைந்தார்.மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் காயம் அடைந்த பிளாஸ்டிக் லோடு லாரியின் ஓட்டுனர் மனோகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வழித்தடத்தில் பாதிப்ப டைந்த போக்குவரத்தையும் சீர் செய்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • திருமங்கலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    • இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

    திருமங்கலம்

    கடலூர் மாவட்டத்தி லிருந்து நெல் மூைடகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    ராஜபாளையம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே உள்ள பாலத்தில் சென்றபோது ஓசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காய்கறி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதனை ஓட்டி வந்த டிரைவர் நெல்லையைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பவர் படுகா யமடைந்தார்.

    உடனே அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை உதவி வாகனத்திற்கு தகவல் அளித்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

    • கேரளாவுக்கு ஜல்லி, எம்சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் செல்கிறது.
    • 3 டிப்பர் லாரிகளுக்கும் தலா ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கேரளாவுக்கு ஜல்லி, எம்சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் செல்கிறது. இந்நிலையில் அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவ தாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் சோதனையில் ஈடுபட்ட போது அளவுக்கு அதிகமாக எம்சான்ட் ஏற்றியபடி 3 டிப்பர் லாரிகள் வந்தன. அவற்றை கனிம வளத்தடுப்புதுறை சப்-இன்ஸ்பெக்டர் திலிபன் தலைமையிலான போலீஸ் படையினர் மடக்கி பிடித்து தக்கலை போலீசில் ஒப்படைத்தனர். 3 டிப்பர் லாரிகளுக்கும் தலா ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 95,850 அபராதம் விதிக்கப்பட்டு 3 டிப்பர் லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

    • கடந்த 2014-ம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தது.
    • எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகையை கடந்த 2014-ம் ஆண்டு முதல் உயர்த்தி தரவில்லை.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்கு பெட்டகம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடு பட்டுள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்தி தரப்பட வில்லை. வாடகையை உயர்த்தி தராததால் வருகிற 4-ந்தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இயங்கும் ஒப்பந்ததாரர்கள் முடி வெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து டிரெய்லர் ஆர்கனைசேஷன் அசோசியேஷன் செயலாளர் எம்.எம்.கோபி. கூறியதாவது:-

    சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்கு பெட்டகம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்து செல்வது வழக்கம்.

    எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகையை கடந்த 2014-ம் ஆண்டு முதல் உயர்த்தி தரவில்லை. இது குறித்து பல்வேறு முறை சி.எப்.எஸ், சி.எச்.ஏ. ஸ்டீமர் ஏஜென்ட் ஆகிய அமைப்புகளிடம் கேட்டோம். எங்களுக்கு உடனடியாக வாடகை உயர்த்தி தர வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தது. தற்போது 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இன்சூரன்ஸ், எப்.சி. மற்றும் உதிரி பாகங்களில் விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால் உடனடியாக எங்களுக்கு வாடகை உயர்த்தி தர வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் எங்களது அனைத்து சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் உள்ள ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பு சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி வருகிற 4-ந்தேதி முதல் கண்டெய்னர் லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×