search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோந்து பணி"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1,100 கிராம் பறிமுதல்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண் டியநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், சோளிங்கர் பகுதியை சேர்ந்த 19 வயது வாலி பர் என்பதும், மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து, 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • வட மாநில வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    ஒடிசாவில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் இணைந்து ஆம்பூர் தற்காலிக பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் சுற்றித்திரிந்தார்.

    அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத்மாஜி (வயது 37) என்பதும், அம்மாநிலத்தில் இருந்து ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதிதாக 55 போலீசார் சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ளனர்.
    • சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசார் வெவ்வேறு போலீஸ் நிலை யங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். விருப்ப பணியிடம் அடிப்ப டையில் பலருக்கும் அவர்கள் கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஆயுதப் படையில் புதிதாக 55 போலீசார் சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ள னர். இவ்வாறு பணி மாறுதல் பெற்றுள்ள போலீ சாருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கி னார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆயுதப்படை போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் நிலையங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள் கிறேன். ஆயுதப்படைக்கும் போலீஸ் நிலைய பணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஆயுதப்படையில் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே சென்றிருப்பீர்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் அப்படி இருக்காது. மக்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் செல்ல வேண்டி இருக்கும். பொறுமையாக செயல்பட வேண்டும். பொறுமையாக இருந்தாலே பல பிரச் சினைகள் வராது. பணி மாறுதல் பெற்றுள்ள வர்களின் செயல்பாடுகள் 6 மாதம் தொடர்ந்து கண் காணிக்கப்படும். பணியில் சரியாக செயல்படவில்லை என்றால் மீண்டும் அவர்கள் ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இரவு நேர ரோந்து பணியில் அலட்சியமாக இருக்கக்கூ டாது. பண விவகாரங்கள், சொத்து விவரங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யா தீர்கள். பண மோசடி வழக்கில் உரிய ஆதாரம் இருந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நில பிரச்சனையை பொறுத்தவரை டாக்கு மெண்ட் சரியானதுதானா? நிலத்தின் உரிமையாளர் உண்மையில் யார்? என்ப தற்கான ஆதாரம் சரிபார்க்க வேண்டும். அவ்வாறு மோசடி நடந்திருப்பது உறுதியானால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையில் வருகிறார்கள்.

    அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு தினமும் ½ மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப் பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண் டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டு பைக் ஓட்டி சென்றார். அவர் உடனடி யாக சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார். எனவே பெண் போலீசார் உள்பட அனைத்து போலீசாரும் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு ரோந்து பணியிலும் அலட்சி யம் காட்டக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் தலைமையில் நேற்று முன்தினம் இசாகொளத்தூர் பஸ் ஸ்டாப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தேசூரைச் சேர்ந்த துரைமுருகன்(23), நந்தகுமார்(26) என்பதும், இவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.இதனையடுத்து போலீசார் துரைமுருகன், நந்தகுமார் ஆகிய 2 பேரை மீகைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில், வேலூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அந்த வழியாக வந்த லாரியை மடக்கினர்.

    இதனைப் பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.

    பின்னர் போலீசார் சோதனை செய்தபோது, அதில் திருட்டுத்தனமாக செம்மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.

    லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேஷ சமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது21) என்பவர் முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் குபேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ரிஷிவந்தியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரிஷிவந்தியம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    • பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அம்பேத்கர் நகர் மற்றும் ரெயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது ெரயில் நிலையம் அருகில் உள்ள பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த சின்ன கள்ளிப்பட்டை சேர்ந்த நவநீதன்(31), ராஜா(26). சாவடி பாட்டை தெருவை சேர்ந்த இளவரசன் (26)ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    • காரைக்கால் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்காலை அடுத்த நிரவி ஹேவெய்ஸ் நகரில், தடை செய்யப்பட்ட போதை புதையிலை பொருள்க ளான குட்கா, ஹான்ஸ், கூல்லிப் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ஹேவெய்ஸ் நகரில் ரவி (வயது47) என்பவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரவியிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27), நிரவி கீர்த்திகா நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகிய 3 பேரை கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
    • நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.

    திருவள்ளூர்:

    கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் ரோந்து பணி சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். அப்போது இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்கள்.


    அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்து, நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.

    இந்த ஆய்வின் போது திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்கலா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஹைவே’ போக்குவரத்து போலீசாரின் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • அதிகரிக்கும் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட 'ஹைவே' போலீசார் தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    சோதனை சாவடியில் போலீசார் இல்லாதால் விபத்துக்களை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர். இரவில் நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதுவதும், அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை கீழாக கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும் இந்த சாலையில் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது. இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    நேற்று நதிப்பாலம் அருகே நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சிக்னல் விளக்கு அமைக்க கோரி பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதியில் விபத்து என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப்பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×