search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராவணன்"

    • சோழர் காலமான கி.பி.1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது
    • மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    திருத்தலம் புதுச்சேரி & விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

    புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.

    அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது.

    இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர்.

    லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவிலில் உள்ளன.

    முதன்மைக் கடவுளான திருவந்திபுரம் தேவநாதன்தான் இங்கு நரசிம்மராக சேவை சாதிக்கிறார் என்பர்.

    ஆனால் திருமங்கையாழ்வார் நரசிம்ம சாமிதான் திருவந்திபுரத்தில் தேவநாத சாமியாக உள்ளார் என்று பாடியிருக்கிறார்.

    ஸ்ரீஅஹோபில மடத்தில் 4வது தலைமை பீடாதிபதியின் பிருந்தாவனமும் இங்குள்ளது.

    ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.

    இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.

    பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.

    மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

    வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன.

    மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது.

    இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன.

    பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.

    • இத்திருக்கோவிலின் தல விருட்சம் மகிழமரம்.
    • பெரிய விளக்கு, மாவிளக்கு ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.

    இந்த திருக்கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது.

    முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.

    கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான்.

    இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எவரெவர் தங்களுக்குச் சிறந்த வேலையும், வேலையில் உயர்ந்த பதவியும் அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.

    தங்களுடைய விருப்பம் நிறைவேறிய பின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள்.

    அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.

    மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.

    ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இத்திருக்கோவிலுக்கு உள்ளே ஒரு கிணறு உள்ளது.

    அதற்கு அருகில் "நாககோபம்" கருடன், கோமுகி, தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோவிலின் தல விருட்சம் மகிழமரம்.

    • அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான்.
    • அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும்.

    இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார். ஆகவே இது பரிக்கல் எனப்படும்.

    வசந்தராஜன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

    அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான்.

    வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.

    அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.

    இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான்.

    அவனுடைய குருவின் ஆணைப்படி இந்த இடத்தில் தவம் புரிந்தான்.

    நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார்.

    அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான்.

    ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.

    அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்க்ள.

    இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான்.

    அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் "பரிக்கல்புரம்" என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.

    • ஸ்ரீசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடை பெறுகின்றன.
    • எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    எல்லா மாதங்களிலும், சுவாதி நட்சத்திரத்தன்று இந்த நரசிம்மரை மக்கள் வழிபடுகிறார்கள்.

    சுவாதி நட்சத்திரம் ஸ்ரீநரசிம்மருடைய அவதார திருநட்சத்திரம்.

    அன்று சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் முதலியன நடைபெறுகின்றன.

    ஸ்ரீசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடை பெறுகின்றன.

    புரட்டாசி மாதத்தில் எல்லா சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், 3வது சனிக்கிழமை பூஜையையும், இத்திருக்கோவிலில் மிகச் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

    மற்றொரு சிறப்பான விழாவாக பெண்ணையாறு பூஜை பொங்கல் பண்டிகைக்கு பிறகு வரும் 5ம் நாள் (சுவாதி நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது.

    எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அக்டோபர் மாதத்தில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    9ம் நாள் சிறப்பாக விசேஷ ஹோமம் செய்யப்படுகிறது.

    உற்சவமூர்த்தி ஸ்ரீநரசிம்மருடைய புறப்பாடு (1 கி.மீ. தூரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் தை (தமிழ்) மாதம் 5ம் நாள் நடைபெறும்.

    எவர் ஒருவர் இங்கு வந்து எம்பெருமானை வணங்கி அதே நாளில் தீர்த்தவாரி செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் முழுமையான சிறப்பான வாழ்க்கையும் பகவானுடைய ஆசியால் நிச்சயமாக அமைகின்றது.

    • அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.
    • அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள்.

    தலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர்.

    அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர்.

    அதனால் இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஓரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார்.

    பகவானுடைய கோபத் தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார்.

    தாயார் லட்சுமியின் கருேணாகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.

    பூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில் களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர்.

    ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான்.

    நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.

    அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான்.

    முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார்.

    இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின.

    முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான்.

    இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும்,

    முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான்.

    கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் "நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறினார்.

    அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை.

    அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது.

    அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.

    அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.

    அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங் குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான்.

    அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    • ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
    • பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

    தீயசக்திகளை அழிக்க கடவுள் அவதாரம் எடுப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

    ஒரு கடவுள் எந்த நோக்கத்துக்காக அவதாரம் எடுக்கிறாரோ, அந்த நோக்கம் முடிந்ததும், அந்த அவதாரமும் நிறைவு பெற்றுவிடும்.

    மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்தார்.

    ராவணனை அழித்ததும் அவர் அவதாரம் முடிந்து போனது.

    அதுபோல தான் கிருஷ்ண அவதாரமும். கம்சனை வதம் செய்த பிறகு அந்த அவதாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

    ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    நொடியில் தோன்றி தன் பக்தன் பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த இணையற்ற சிறப்பு அந்த அவதாரத்துக்கு உண்டு.

    இரண்யனை வதம் செய்து அழித்த பிறகு நரசிம்மர் உடனே தன் அவதாரத்தை முடித்துக் கொள்ளவில்லை.

    அதற்கு பதில் தன் பக்தன் பிரகலாதன் சீரும், சிறப்புமாக வாழ எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தார்.

    ராஜநீதிக்கான சாஸ்திரங்களை அவர் பிரகலாதனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

    ஒரு நாட்டை ஆள்வதற்கு ஏற்ப பிரகலாதனை தயார்படுத்தினார்.

    எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார்.

    அதுமட்டுமின்றி பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

    தொடர்ந்து வழிகாட்டவும் உறுதி அளித்தார்.

    எனவே நரசிம்மர், ராஜபரிபாலனம் செய்ய உகந்தவர் என்று புகழப்படுகிறார்.

    இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இத்தலத்து இறைவனிடம் சரண் அடைவது அதிகரித்தபடி உள்ளது.

    அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் இத்தலத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    இந்த வழிபாடு பூவரசன்குப்பம் தலத்தில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

    • சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

    அனைத்து நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று பொதுமக்கள் எம்பெருமானுக்குரிய பூஜையையும், காணிக்கைகளையும் செலுத்துகின்றனர்.

    சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இப்படிப்பட்ட புராதன சிறப்பு வாய்ந்த 3 நரசிம்ம சாமி கோவில்களைப் பற்றி ஓரளவு காண்போம்.

    சிங்கிரி, பரிக்கல், பூவசரங்குப்பம் ஆகிய 3 நரசிம்ம சாமி திருக்கோவில்களையும் ஒரே நாளில் சென்று தரிசித்தால் மக்கள் தங்களுடைய நிறைவேறாத விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்கள் உள்ளன.

    1. சிங்கிரிகுடி கோவில்,

    2. பரிக்கல்,

    3. பூவசரங்குப்பம்.

    இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.

    ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

    மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்ற முப நம்பிக்கையில் இந்த 3 நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க விரும்பகின்றனர்.

    ஆகவே இந்த 3 கோவில்களும் மிகவும் பிலபமாக உள்ளன.

    • எந்த கடவுளாலும், எந்த தேவர்களாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தை சாந்தப்படுத்த முடியவில்லை.
    • பிரகலாதன் பணிவுடனும், பக்தியுடனும் பகவானை சாந்தம் செய்தான்.

    இரண்யனை அழித்த பிறகு எந்த கடவுளாலும், எந்த தேவர்களாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தை சாந்தப்படுத்த முடியவில்லை.

    அதனால் அவர்கள் எல்லோரும் ஸ்ரீமகாலட்சுமியை சரண்டைந்தனர். ஆனாலும் அவளாலும் அவருடைய உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    பிரம்மாவின் வேண்டுதலின்படி, பரம பாகவதனான பிரகலாதன் ஸ்ரீநரசிம்மனின் முன்பாகச் சென்று, பணிவுடனும், பக்தியுடனும் பகவானை சாந்தம் செய்தான்.

    அதனால் மனம் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்ம சாமி சாந்தமானார்.

    தன்னுடைய சுயரூபத்தை அடைந்து சாந்தமான பகவான் தானே சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டது இந்த விபவ அவதாரத்தின் தனித்தன்மையாகும்.

    தன்னுடைய பக்தனான குழந்தை பிரகலாதனைக் காப்பாற்றவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பகவான் சுயம்புவாகத் தோன்றினார்.

    • எல்லா இடங்களிலும் அவருடைய அர்ச்சாவிக்ரகம் சாந்தமாகவும், ஆனந்தமாகவும் அமைதியாகவே உள்ளது.
    • நாம் நவ நரசிம்மர்களை 9 விதமான உருவங்களில் வணங்குகிறோம்.

    ஸ்ரீமந் நாராயணனின் 10 அவதாரங்களில் துஷ்டர்களை அழிக்கவும், இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களையும், அசையப் பொருள்களையும் காப்பதற்கும், தோன்றிய மிகச் சிறந்த அவதாரம் ஸ்ரீநிசரம்ம அவதாரமாகும்.

    ஸ்ரீமகாவிஷ்ணுவே பூர்ணாவதாரமாக இந்த விபவ அவதாரத்தில் உலகத்தில் தோன்றியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

    ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தது மிகவும் பயங்கரமாக இருந்தது.

    ஆனால் எல்லா இடங்களிலும் அவருடைய அர்ச்சாவிக்ரகம் சாந்தமாகவும், ஆனந்தமாகவும் அமைதியாகவே உள்ளது.

    அவருடைய சிலாவடிவம் (திவ்யமங்கள விக்ரகம்) பக்த பிரகலாதன், மற்ற முனிவர்களுடைய பிம்பங்களுடன் சேர்ந்தே அமைந்துள்ளது.

    ஸ்ரீநரசிம்ம பகவானுடைய அர்ச்சா விக்ரகங்கள் 36 விதமாக அமைந்துள்ளது. எண்ணற்ற விதத்தில் மகாவிஷ்ணுவின் திருக்கோவில்களில் அவருடைய வெவ்வேறு பிம்பங்கள் தூண்களிலும் சுவர்களிலும் காணப்படுகினறன.

    ஆனால் நாம் நவ நரசிம்மர்களை 9 விதமான உருவங்களில் வணங்குகிறோம்.

    1. சத்திரவட நரசிம்மர் (பகவான் ஒரு ஆல மரத்தரடியில் அமர்ந்திருப்பது போல)

    2. யோக நரசிம்மர் (யோகத்திருப்பது போல்)

    3. உக்ர வடிவ நரசிம்மர் (சில மிகவும் கோபமாக)

    4. கிரோட நரசிம்மன் (வராக நரசிமமர், இரண்யாட்சனிடம் மிகவும் கோபமாக)

    5. ஸ்ரீமாலோல நரசிம்மர் (ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடியவராக)

    6. ஜவாலா நரசிம்மர் (தூணிலிருந்து தோனறுபவராக)

    7. பாவன நரசிம்மர் (எல்லா பாவங்களையும் போக்கக் கூடிய நரசிம்மராக)

    8. பார்க்கவ நரசிம்மர் (எல்லோரையும் கடாட்சிக்கிறவராக)

    9. காரஞ்ச நரசிம்மர் (கூர்மையான நகங்களையுடையவர்.

    இந்த விதமான அமைப்புக்களை உடைய உருவச் சிலைகளை நாம் எல்லா திருக்கோவில்களிலும் காணலாம்.

    ஆகவே நரசிம்ம அவதாரத்தின் சிறப்பு எண்ணற்றதாகும்.

    • புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்ம சாமி இந்த பூமியில் அவதரித்தார்.
    • ஸ்ரீமத் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.

    இரணியகசிபுவினுடைய கொடும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அக்குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட இடத்திலேயே அவதரித்தார்.

    அசுரனின் முதல் விருப்பத்தின்படி மனிதானாகவோ, மிருகமாகவோ அல்லாமல் ஸ்ரீமத் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.

    சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும், சிறந்த கண்களுடனும், தலைக்கு கீழ்பாகம் மனித உடலுடனும், கூர்மையான நகங்களுடனும் தோன்றினார்.

    புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்ம சாமி இந்த பூமியில் அவதரித்தார்.

    கடவுள் சந்தியா காலத்தில் சூரியன் குறைந்த ஒளியுடன் திகழ்ந்த வேளையில் பாதி உயிரிழந்த நிலையிலும் இரண்யகசிபுவைத் தன் மடியில் (தன் தொடையின் மீது) அந்த மண்டபத்தின் வாயிற்படியில் முற்றத்திற்கு உள்ளேயுமில்லாமல், வெளியேயுமில்லாமல் இருத்தி அனுடைய வயிற்றை தன் கூர்மையான நகங்களினால் கிழித்துக் கொன்றார்.

    எம்பெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பதற்காக மிகவும் பயங்கரமான அவதாரம் எடுத்ததைப் பார்த்த பிரகலாதன், தன்னுடைய தந்தையைக் கொல்வதற்காக பகவான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டான்.

    இதுவே ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் சிறப்பும், அற்புதமும் ஆகும்.

    • பிரகலாதன் தன் தந்தையை கடவுளாகக் கருதவில்லை.
    • உடனே இரண்யகசிபு தன் கதையால் அத்தூணைப் புடைத்தான்.

    இரண்யகசிபு தன் அண்ணனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை தன் மகன் துதிப்பதைப் பார்த்து தன் மகனே தனக்கு எதிரியாகி விட்டானே என்று நினைத்தான்.

    ஆகவே தன் மகனைக் கொல்வதற்காக பற்பல கொடுமையான வழிகளைக் கையாள, நினைத்தான்.

    ஒவ்வொரு முறையும், இரணியகசிபு தன் மகனைக் கொல்ல நினைத்த வழிகளில் விஷ்ணு வந்து குறுக்கிட்டு பிரகலாதனைக் காத்து நின்றான்.

    பிரகலாதன் தன் தந்தையை கடவுளாகக் கருதவில்லை.

    பகவான் விஷ்ணுவைத்தான் தன்னுடைய காவலரன் (கடவுள் நாராயணன்) என்று நம்பினான்.

    இரண்யகசிபு தன்னுடைய முயற்சி எல்லாம் தோல்வியடைந்ததை நினைத்து ஒரு மாலைப் போது மிகவும் கடும் கோபம் கொண்டு கோபத்தினால் தன்னுடைய மகனை இழுத்து வந்து ஒரு கல் தூணைக் காண்பித்து, உன்னுடைய விஷ்ணு இக்கல் தூணில் இருக்கிறானா? என்று வினவினான்.

    பக்தனான பிரகலாதன் மிகவும் வினயத்துடன் கைகளைக் குவித்து, என்னுடைய இறைவன் ஸ்ரீமந் நாராயணன் எங்கும் உள்ளான், எல்லா இடத்திலும் எப்போதும் உள்ளான். அவன் கல்லிலும் இருப்பான், சிறு துரும்பிலும் இருப்பான் என்று பதிலுரைத்தான்.

    உடனே இரண்யகசிபு தன் கதையால் அத்தூணைப் புடைத்தான்.

    அப்போது பகவான் விஷ்ணு பயங்கர கர்ஜனையுடன், மின்னல் வேகத்தில் அத்தூணியிலிருந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்தார்.

    • பாகவதர்களுக்குள் தலை சிறந்தவனான பிரகலாதன் அவனுக்கு மகனாகப் பிறந்தான்.
    • இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இளம் வயதிலேயே நல்ல குணங்களை அடைந்திருந்தான்.

    இரண்யகசிபு கேட்ட வரத்தை பிரம்மன் அளித்ததால் தேவர்களும், மனிதர்களும் மிகவும் அஞ்சினார்கள்.

    இரண்யகசிபு தன்னுடைய நீண்ட கால தவத்தின் பயனாக தனக்கு வரம் கிட்டியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

    தான் மரணத்திலிருந்து விடுதலை அடைந்ததாக பெருமகிழ்ச்சி அடைந்தான்.

    பாகவதர்களுக்குள் தலை சிறந்தவனான பிரகலாதன் அவனுக்கு மகனாகப் பிறந்தான்.

    அவன் தாய் (கயாதுவின்) வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமந் நாராயண மந்திரத்தை (நமோ நாராயண) நாரதமுனிவரின் வாயிலாகக் கேட்டு அறிந்து கொண்டான்.

    இதனால் இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இளம் வயதிலேயே நல்ல குணங்களை அடைந்திருந்தான்.

    அவன் பிறவியிலேயே பாகவதனாக இருந்ததால் அந்த நல்ல குணங்கள் அவன் வளர வளர மேன்மேலும் அவனுள் நன்கு ஊறியிருந்தன.

    மெதுவாக அவன் விஷ்ணுபக்தன் என்பதை எல்லோரும் அறிந்தனர்.

    அவனுடைய தந்தை இரண்யகசிபு தன்னுடைய எதிரியான விஷ்ணுவின் பக்தனாக தன் மகன் வளருவதைத் தெரிந்து கொண்டான்.

    அதனால் அவன் மிகவும் மன உளைச்சலும், வருத்தமும் அடைந்தான்.

    ×