search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமகிருஷ்ண மடம்"

    • ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார்.
    • பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமரின் புகழை பஜனைகள் பாடியும், கீர்த்தனைகளாக ஒலித்தும், வழிபாடுகள் நடத்தியும் வருகிறார்கள்.

    அந்த வகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் உள்ள தெய்வீக உணர்வை எழுப்பும் விதமாக விதிகளின் படியும், வேதங்களின் படியும் கடந்த 12-ந்தேதி முதல் 11 நாட்கள் விரதத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

    இதையடுத்து ராமாயணம் மற்றும் ராமருடன் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் லெபாக்ஷியில் உள்ள வீர பத்திரர் கோவிலில் தொடங்கிய இந்த பயணம் தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நிறைவு செய்கிறார்.

    இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேசுரத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் எனப்படும் ராம கிருஷ்ண தபோவனத்தில் தங்குகிறார்.

    இந்த மடத்தில் வழக்கமான வழிபாடுகள், பஜனைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை ராம்நாம சங்கீர்த்தனம், சமய சொற்பொழிவுகள், கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகிறது. எளிமையுடன் கூடிய ஆன்மீகத்தை நாடுவோர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    அதன்படி ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார். அப்போது தரையில் படுத்து உறங்குகிறார். முன்னதாக அந்த மடத்தில் தங்கியிருக்கும் துறவிகளையும், சன்னியாசிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டில் இருந்து விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது.
    • எங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளும் விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் பேசினார்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழா விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

    சென்னையில் 125 ஆண்டுகளை நிறைவு செய்த ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவேகானந்தர் இல்லத்தை காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

    தமிழ் மொழி, தமிழ் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகிறேன். நான் தமிழக மக்களையும் சென்னையையும் மிகவும் நேசிக்கிறேன்.

    ராமகிருஷ்ண மடம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்தாக்கம் எத்தகையது என உணர்ந்திருக்கிறேன். சுவாமி விவேகானந்தர் பெங்காலில் இருந்து வந்தவர். அவர் ஒரு கதாநாயகனைப்போல் தமிழகத்தில் வரவேற்கப்பட்டார். இது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்ச்சியை இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நமக்கு தருகின்றன. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இந்த உணர்ச்சியோடுதான் ராமகிருஷ்ண மடங்கள் பணியாற்றுகின்றன.

    எந்த சுயநலமும் இன்றி இங்கே இருக்கின்ற துறவிகள் பணியாற்றுகிறார்கள். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை காசி தமிழ் சங்கமத்தில் கூட நான் பார்த்தேன். இப்போது சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடக்கவிருக்கிறது. இதைப்போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றி பெற வேண்டும்.

    எங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளும் விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவை. அனைவருக்கும் சமமான ஒரு நிலையை உறுதிப்படுத்தனால் சமூகம் முனனேறும் என அவர் கூறினார். முன்னால் நடந்த ஆட்சியில் அடிப்படை வசதிகள்கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால், இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். உலக தரத்திலான கல்விக்காக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    எங்களின் முத்ரா யோஜனா திட்டம் இன்று 8வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இந்த திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் பல தொழில் முனைவோர் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த திட்டத்தின்மூலம் சிறு உற்பத்தியாளர்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் இந்த கடன் வசதி தரப்பட்டிருக்கிறது.

    இதற்கு முன்பு வங்கியில் கடன் பெறுவது என்பது பெரிய மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. இதை நாம் மாற்றியிருக்கிறோம். மின்சாரம், எரிவாயு இணைப்பு, குடிநீர், கழிப்பறை போன்றவைகளை நாங்கள் அளித்துவருகிறோம்.

    சுவாமி விவேகானந்தர் இந்தியாவைப் பற்றி பெரிய பார்வையை கொண்டிருந்தார். இப்போது இந்தியா அவரது கொள்கைகளை நிறைவேற்ற பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவர் மேலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைவார் என்று நினைக்கிறேன்.

    நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்கவேண்டும், நாட்டின் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் என அவர் கூறினார். அதை அடையும் நாள் இந்தியா நூற்றாண்டு விழா காணும் நாளாக இருக்கும். இப்போது நம்முடைய நேரம். உலக நாடுகளை நாம் நல்ல நம்பிக்கையோடும் மரியாதையோடும் எதிர்கொள்கிறோம். நம் இளைஞர்கள் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும்போது நாட்டை முன்னேற்ற தயங்க மாட்டார்கள்.

    விவேகானந்தரின் தத்துவங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை. கல்வியே ஒருவனை வலிமை உள்ளவனாக ஆக்கும் என அவர் நம்பினார். தொழில்நுட்ப கல்வியும் அனைத்து விதமான உயர் கல்வியும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என அவர் நினைத்தார். உலகிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவியல் களம் நம் நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது.

    பஞ்ச பிரான் கொள்கைகளை அனுசரித்து ஒரு உச்ச நிலைக்கு நாம் கொண்டு வரவேண்டும். காலனிய மனப்பான்மையை நீக்குதல், நம்முடைய பாரம்பரியத்தை வளர்த்தல், நமது ஒற்றுமையில் கவனம் செலுத்துதல் போன்ற விஷயங்கள்தான் இந்த பஞ்ச பிரானத்தில் வருகிறது. இந்த பஞ்ச பிரானத்தை நிறைவேற்ற 130 கோடி மக்களும் முடிவெடுத்தால் நாடு நிச்சயமாக முன்னேறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை- கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    • வழியெங்கும் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் திரண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சென்னை:

    பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அவரை வரவேற்றனர்.

    இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து, ஹெலிகாப்டரில் மூலம் நேப்பியர் பாலம் அருகிலுள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று, சென்னை- கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், மாலை 4.25 மணி அளவில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தைச் சென்றடைந்தார். அங்கு ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும் பங்கேற்றார்.

    வழியெங்கும் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ×