search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபாளையம்"

    • ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

    ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட்ராஜா மற்றும் ராகஜோதி ராம்விஷ்ணு ராஜா, கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • சித்தி விநாயகர் சிலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது.
    • சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம்தெரு மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணிமன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு 35-வது ஆண்டு விநாயகர் சதூர்த்தி வீதி உலாவை நடத்துகிறார்.

    இதையொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மும்பையில் வடிவமைக்கப்பட்ட மும்பை சித்தி விநாயகர், வல்லப விநாயகர் சிலை இன்று அதிகாலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது. மேலும் நடப்பு தமிழ் வருடத்தை போற்றும் வகையிலான சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • ராஜபாளையத்தில் மாலைநேர உழவர் சந்தை நடத்தப்படுகிறது.
    • மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 1999-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர் சந்தை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும் நுகர்வோருக்கு தரமான, பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் வழங்குவது ஆகும்.

    2022-23-ம் ஆண்டு–க்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் மாலை நேர உழவர் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அழுகக்கூடிய பொருட்கள் தவிர பிற வேளாண் பொருட்களான தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.

    இத்தகைய விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக சந்தைகளில் விற்பனை செய்யும்பொழுது விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிப்பதோடு நுகர்வோர்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை நேரங்களில் செயல்படும் உழவர் சந்தைகள் தற்போது விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோர் வருகை அதிகமுள்ள ராஜபாளையம் உழவர்சந்தையில் மாலை நேர சந்தை தொடங்கப்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெல்லம், காளான், நாட்டு முட்டை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேர சந்தைகளில் பங்கேற்க விரும்பும் தகுதியான விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் அலுவலகம் (04562- 242601) அல்லது சந்தை நிர்வாக அலுவலர் , ராஜபாளையம் உழவர் சந்தை (8610067536) தொடர்பு கொள்ளலாம்.

    பொது மக்கள் தரமான அரிசி, பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மாலை நேர உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறக்கப்பட்டது.
    • மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரைரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே சிவகுலத்தோர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்பட திறப்பு விழா நடந்தது.

    மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுகுநாதன் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்டமகளிரணி தலைவி தமிழ்செல்வி, நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, வனராஜ், முனியசாமி,இளைஞரணி முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவிப்பு

     ராஜபாளையம்

    ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (7-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.கே நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜ.என்.டி.யு.சி.நகர், பாரதிநகர்,கே.ஆர்.நகர், சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை,வ.உ.சி நகர்,பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம்,எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம்,ராம்கோ நகர்,

    பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி,வரகுணராமபுரம்,அம்மன்கோவில்பட்டி, போலீஸ்காலனி,ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பம்ப ட்டி, சங்கரபாண்டியபுரம்ம ற்றும் தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம்,தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி,கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள்கோவில், விஷ்ணுநகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    ×