search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Evening"

    • திருப்பதியில் நாளை கருடசேவையை முன்னிட்டு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது.
    • கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மூலவர் வடபத்ர சயனர் தினமும் பூஜையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    அதேபோல் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை ஆகிய நிகழ்ச்சி களின்போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    அதற்கு மறு சீராக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் ஆண்டா ளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை கள்ளழகர் உடுத்தி கொடுத்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தின் போது அணிவதற்காக திருப்பதி பெருமாள் உடுத்தி கொடுத்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்க டேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் நாளை (22ந்தேதி) மலையப்ப சுவாமி மோகன அலங்கா ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மாலை கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளிப் பார்.இதற்காக ஸ்ரீவில்லி புத்தூரில் பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகி யவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது
    • விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி பேரூராட்சியில் கண்ணைக் கவரும் விதத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் காட்சியளிக்கிறது. பொதுவாக கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களில் பூக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது. வாசமில்லாத மலர் என்றாலும் கண்ணைக் கவரும் இதன் அழகு மற்றும் 8 நாட்கள் வரை வாடாத தன்மை ஆகியவையே இந்த பூக்களை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகிறது.

    இந்த கோழிக்கொ ண்டைப் பூக்களை மாலையில் வைத்துக் கட்டும் போது ரோஜாப்பூக்களின் தோற்றத்தைத் தருகிறது. இதனாலே இந்த பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு உள்ளது. பண்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரேவிதமான பயிர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும். இதனால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவை மழைக்காலம், கோடைக் காலம், குளிர் காலம் என எல்லா பருவங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

    • சனிக்கிழமை 75 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் சுதந்திர தின விழா ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது.
    • 75 நூல்கள் தொடர்ச்சியாக வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலகத் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் பிறந்தநாள் நூலகர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நூலகர் தின விழாவிற்கு நூலக வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமை வகிக்கிறார். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி அய்யப்பன், எஸ் .ஆர். ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கிறார். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,செயலாளர் சக்தி ,பயிற்சியாளர் நாயப்சுபேதார் ,நடராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நூலகப் பயன்பாடு குறித்த கட்டுரை ,கவிதை, பேச்சுப் போட்டியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து 14 ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு 75 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் சுதந்திர தின விழா ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர். நல்லா சிரியர் விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார்.

    ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தின விழா அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நூலக வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்று தொடர்ந்து வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி 75 நூல்கள் தொடர்ச்சியாக வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் முன்னாள் ராணுவீரர்கள் நலச் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

    • போலீசார் விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
    • இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த மாதம் 26-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆசிப் முசாப்தீன் (27) என்ற வாலிபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், டைரிகள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினார்.

    போலீஸ் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

    இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கைதான ஆசிப் முசாப்தீன் மீதான வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு நேற்று முன்தினம் வந்தது.

    இதற்காக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து முசாப்தீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    விசாரணையின் போது முசாப்தீனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மாலதி 2 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஆசிப் முசாப்தீனை போலீசார் ரகசிய இடத்தில் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அவருக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது.

    அவருக்கு யாரெல்லாம் உதவி செய்தனர். தமிழகத்தில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளை முசாப்தீ னுவிடம் அடுக்கடுக்காக கேட்டனர். விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் உடன் இருந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்தது. இன்று மாலையுடன் போலீஸ் காவல் முடிவடைய உள்ளதால் போலீசார் முசாப்தினை இன்று மாலை மீண்டும் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.

    • ராஜபாளையத்தில் மாலைநேர உழவர் சந்தை நடத்தப்படுகிறது.
    • மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 1999-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர் சந்தை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும் நுகர்வோருக்கு தரமான, பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் வழங்குவது ஆகும்.

    2022-23-ம் ஆண்டு–க்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் மாலை நேர உழவர் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அழுகக்கூடிய பொருட்கள் தவிர பிற வேளாண் பொருட்களான தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.

    இத்தகைய விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக சந்தைகளில் விற்பனை செய்யும்பொழுது விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிப்பதோடு நுகர்வோர்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை நேரங்களில் செயல்படும் உழவர் சந்தைகள் தற்போது விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோர் வருகை அதிகமுள்ள ராஜபாளையம் உழவர்சந்தையில் மாலை நேர சந்தை தொடங்கப்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெல்லம், காளான், நாட்டு முட்டை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேர சந்தைகளில் பங்கேற்க விரும்பும் தகுதியான விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் அலுவலகம் (04562- 242601) அல்லது சந்தை நிர்வாக அலுவலர் , ராஜபாளையம் உழவர் சந்தை (8610067536) தொடர்பு கொள்ளலாம்.

    பொது மக்கள் தரமான அரிசி, பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மாலை நேர உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்ததினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    முன்னதாக ஐ.என்.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயாலளர் பூதலூர் என்.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, மாவட்ட ஊடக பிரிவுதலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்டத்தலைவர் கதர்வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏரிப்புரக்கரை ராஜேந்திரன், தேசிகன், அய்யாறு, சுந்தர், பாலசுப்ரமணியன் காலிங்கராயர், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×