search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவி அவானா"

    விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றும், இரண்டு கெட்அப்புகளில் வந்து கலக்குவதாக இயக்குநர் சிவா கூறினார். #Viswasam #AjithKumar #ViswasamPongal2019
    சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது.

    ஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான்.



    முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் கிளப்புறார். இதில் அஜித் முதல்முறையாக மதுரை தமிழில் பேசி அசத்தியிருக்கார். அஜித்துக்கு சந்திரன்னு ஒருத்தர் மதுரை தமிழ் சொல்லிக் கொடுத்தார்.

    ஒரு கிராமத்து ஆள் எப்படி இருப்பாரோ அதே உடல்மொழி, பேசுற விதம், துறுதுறுப்பு, துள்ளல்னு பக்காவா தன்னைத் தயார் படுத்திக்கிட்டுப் பண்ணியிருக்கார்’ என்று கூறி இருக்கிறார். #Viswasam #AjithKumar #ViswasamPongal2019 #ViswasamThiruvizha

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இந்திய அளவில் புதிய சோதனை படைத்துள்ளது. #ViswasamMotionPoster #ViswasamPongal2019 #AjithKumar
    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு திடீர் இன்பஅதிர்ச்சியாக படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் இளமை மற்றும் வயதான தோற்றத்தில் அஜித் வலம் வருகிறார். மோஷன் போஸ்டரில் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதையும் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு 9 மணிக்கு வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்டரை இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டர் வரிசையில் விஸ்வாசம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட (144K), தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் (124K), சாமி ஸ்கொயர் (101K), சயீரா நரசிம்மமரெட்டி (82K) உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    அஜித் இந்தப் படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். #Viswasam #AjithKumar #Nayanthara #ViswasamMotionPoster #ViswasamPongal2019 #ViswasamThiruvizha

    விஸ்வாசம் மோஷன் போஸ்டர்:

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    முன்னதாக படப்பிடிப்பு காட்சிகளை முடித்த படக்குழு, பாடல் காட்சிகளுக்காக மும்பை சென்றிருந்தது. தற்போது அனைத்து விதமான காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

    அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar #Nayanthara #ViswasamShootWrapped

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #ViswasamSecondLook #AjithKumar #Nayanthara

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தீபாவளிக்கு படத்தை ரீலஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    தற்போது ஐதராபாத்தில் கிளைமாக்ஸ் சூட்டிங் நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய ஆடிட்டோரியம் ஒன்றில் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் காட்சியில், ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துவரும் முக்கிய நடிகர்கள் அனைவருமே பங்குபெற்றுள்ளார்கள்.

    விஸ்வாசம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் தீபாவளிக்கு படத்தின் டீசர் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூ.48 கோடிக்கு விலை போனது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் இந்த படத்தை கைப்பற்றியிருக்கிறார்.



    இந்த படத்தில் அவருக்கு அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் அறிமுக பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் விவேக், ரவி அவானா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால் எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

    இந்த ‘தூக்கு’ துரை என்ற கேரக்டர் மதுரைக்காரர் என்பதால், மதுரைத் தமிழில் பேசி நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் பாடலாசிரியர் அருண் பாரதி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில், ‘எத்தன உயரம் இமயமல, அதில் இன்னொரு சிகரம் எங்க தல...’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. 

    இந்த வரியை அருண் பாரதியே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவர் படக்குழுவில் இணைந்திருக்கிறார். #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3 வது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக தெலுங்கு வில்லன் நடிகர் ரவி அவானா இணைந்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது. 



    நேற்று அஜித், ரவி அவானா மோதும் சண்டைக்காட்சி படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. அந்த படங்களில் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிறார் அஜித். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த யாரோ ஒருவர் செல்போனில் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. 



    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    ×