என் மலர்

  சினிமா

  விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
  X

  விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவர் படக்குழுவில் இணைந்திருக்கிறார். #Viswasam #AjithKumar
  அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3 வது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

  மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக தெலுங்கு வில்லன் நடிகர் ரவி அவானா இணைந்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.   நேற்று அஜித், ரவி அவானா மோதும் சண்டைக்காட்சி படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. அந்த படங்களில் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிறார் அஜித். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த யாரோ ஒருவர் செல்போனில் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.   சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

  Next Story
  ×