search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததானம்"

    • கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து வழிகாட்டுதலின்படி ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    இதில் மாநகர தலைவர் குத்புதீன், மாநகரச் செயலாளர் சின்னதுரை ,மாநகர துணைத்தலைவர் அலாவுதீன் ,மாநகர ஆலோசகர் பஷீர், மாநகர துணைச்செயலாளர் ரவி ,மாநகர பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் கனகராஜ் ,தனபால், அக்பர் மற்றும் பல்லடம் நகர செயலாளர் சதீஷ் கலந்து கொண்டனர் .

    • ரத்ததான முகாமிற்கு ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
    • சிறப்பு அழைப்பாளராக ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். நகர்மன்ற உறுப்பினர்கள் லவராஜா சண்முகவேல் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமல வாசன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அமளி பிரகாஷ், மகேஷ், கேசவன், சந்திரசேகர், மருத்துவர் தேவசேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறுவன ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • ரத்ததான முகாமில் 5 பெண்கள் உள்பட 55 பேர் ரத்ததானம் செய்தனர்.
    • 61-வது முறையாக ரத்ததானம் வழங்கிய முகமது தம்பி என்பவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளா கத்தில் மக்கள் உரிமை நிலை நாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடந்த இந்த முகாமில் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் புகாரி ஷாஜகான் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    முகாமில் 5 பெண்கள் உள்பட 55 பேர் ரத்ததானம் செய்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை டாக்டர் சசிகலா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் 61-வது முறையாக ரத்ததானம் வழங்கிய காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சேர்ந்த முகமது தம்பி என்பவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். அவருக்கான சான்றிதழை டாக்டர் புகாரி வழங்கினார்.

    முகாமிற்கான ஏற்பாடு களை மெகா அமைப்பின் நிர்வாகிகள் புகாரி, மெகா நூஹு, ஹாரூன் ரசீது, சாலிஹ், முத்து இஸ்மாயில், ஹாமித் ரிபாய், முஜாஹித் அலி, ஜபருல்லா, அப்துல் ஹமீது உள்பட பலர் செய்திருந்தனர்.

    • ரத்ததான சேவை விருது கலெக்டர் வழங்கினார்.
    • அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், ரத்ததான வங்கித் துறை தலைவர் சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     மதுரை

    மதுரை மருத்துவக் கல்லூரியில் ரத்ததான சேவையில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், ரத்ததான வங்கித் துறை தலைவர் சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாவட்ட எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் ஜெயபாண்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கி பாராட்டினார்.

    • அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு ரத்ததானம் கொடுத்து தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்தவர்.
    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முனைவர் துரை ராயப்பனுக்கு நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ரத்த தான கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு 2022-ம் ஆண்டு ரத்ததானம் கொடுத்து, தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்ததற்காக, ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர்முனைவர் நா.துரை ராயப்பனுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப்ராஜ், மாவட்ட ரத்த வங்கி டாக்டர் பிரதிக்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ராய் டிரஸ்ட் பரிந்துரையின் பேரில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த உடற்பயிற்சி பயிற்றுநர்பாலாஜி, சேவை சித்தர் ஜெயபிரகாஷ், ஆர்.வி. சி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சிவசைலம், கரூடா செல் ஷோரூம் உரிமையாளர் கார்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

    ×