search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி வாஷிங் பவுடர்"

    • ஊழல் குற்றசாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது - காங்கிரஸ்
    • மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது

    ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுவதை தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

    அதனையொட்டி, மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தி விமர்சித்தது.

    அந்த வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் என்றும், இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகை என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுவதாக கற்பனை செய்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

    அதில், "இப்போது வாஷிங் மெஷின்களையும் தேர்தல் பத்திரங்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நாங்கள் Paytm கொண்டு வர மாட்டோம். நேரடியாக பிரதமருக்கே பணம் கொடுக்கும் PayPM திட்டம் கொண்டு வருவோம் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை பவன் கெரா அறிமுகப்படுத்தினார்
    • புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்

    மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் 'பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

    அதனுள், 'ஊழல்', 'பாலியல் வன்புணர்வாளர்', 'மோசடி பேர்வழி ' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட 'கறை படிந்த' டி-சர்ட்டை வைத்தார். வாஷிங் மெஷினில் இருந்து டி-சர்ட் வெளியே எடுத்தபோது, 'சுத்தமாக' இருந்தது. அந்த 'சுத்தமான' டி-ஷர்ட்டில் 'பாஜக மோடி வாஷ்' என்று எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் பேசிய பவன் கெரா, புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்'. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் தான். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகையாகும்.

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த கணமே அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வையுங்கள். அவர் வெளியே வரும் போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்.

    சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். 

    ×