search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dawood Ibrahim"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை பவன் கெரா அறிமுகப்படுத்தினார்
    • புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்

    மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் 'பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

    அதனுள், 'ஊழல்', 'பாலியல் வன்புணர்வாளர்', 'மோசடி பேர்வழி ' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட 'கறை படிந்த' டி-சர்ட்டை வைத்தார். வாஷிங் மெஷினில் இருந்து டி-சர்ட் வெளியே எடுத்தபோது, 'சுத்தமாக' இருந்தது. அந்த 'சுத்தமான' டி-ஷர்ட்டில் 'பாஜக மோடி வாஷ்' என்று எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் பேசிய பவன் கெரா, புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்'. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் தான். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகையாகும்.

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த கணமே அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வையுங்கள். அவர் வெளியே வரும் போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்.

    சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். 

    • கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்.
    • விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். இவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மற்றும் இவரது குடும்பத்தாருக்கு சொந்தமான சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில், தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் உள்ள விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலத்தில் விட முடிவு செய்தது. அதன்படி ஏலம் இன்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே கிராமத்தில் இருந்த நான்கு விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

    இதில் இரண்டு நிலங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனால், ரூ. 15 ஆயிரம் என்ற மிக குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்த நிலம் ரூ. 2.01 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் 170.98 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இதே போன்று 1730 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றொரு நிலம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாவூத் இப்ராகிம் குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தை யார் வாங்கியது என்ற விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளன. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.
    • ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து உள்ளது.

    இந்தநிலையில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 4 விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலம் விட உள்ளது.

    ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடும் பணி மும்பையில் நடைபெறுகிறது. ரத்னகிரி தாவூத் இப்ராகிமின் சொந்த ஊராகும். சிறுவயதில் அவர் அங்கு சில காலம் வாழ்ந்து உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மும்பை பென்டி பஜாரில் இருந்த தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துகள் ரூ.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார்.
    • தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.

    மும்பை :

    மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். அவர் நிழல் உலகில் இருந்தபடி உலகம் முழுவதும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கீழ் செயல்படும் கும்பல் 'டி-கேங்' என அழைக்கப்படுகிறது.

    தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் ஹவாலா பணம் மூலம் பயங்கரவாதம், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசினா பார்கரின் மகன் அலிஷா பார்கரிடம் என்.ஐ.ஏ. வாக்குமூலம் பெற்று உள்ளது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் கடந்த ஆண்டு நவம்பரில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தாவூத் இப்ராஹிமின் மனைவி பெயர் மைசாபின். அவருக்கு மாருக், மெக்ரீன், மாசியா என்ற 3 பெண் பிள்ளைகள், மொகின் நவாஸ் என்ற மகன் உள்ளான். மாருக் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகன் ஜூனைத்தை திருமணம் செய்து உள்ளார். மெக்ரீனுக்கும், மகன் மொகின் நவாசுக்கும் திருமணமாகிவிட்டது. மாசியாவுக்கு திருமணம் நடைபெறவில்லை.

    தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார். அவர் பாகிஸ்தானி பதான். தாவூத் இப்ராகிம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக காட்டுகிறார். அது உண்மையில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் அப்துல்லா காஜி பாபா தர்க்கா பகுதிக்கு பின்னால் உள்ள அந்த நாட்டின் ராணுவ இடத்தில் வசித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம்.
    • மிரட்டி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த ஒருவரை தொழில் அதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியுமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி 30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்தனர்.

    இதுதொடர்பாக வெர்சோவா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இதற்கு முன்பும் நில அபகரிப்பு, பணம் பறிப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரோக்கியமான உறவு தொடர வேண்டு மானால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. #India #DawoodIbrahim #SayeedSalahudeen
    புதுடெல்லி:

    காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இந்தியாவில் தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது:-

    இந்தியாவுடனான ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வை நிரூபிக்க பாகிஸ்தான் அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த இந்திய நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.

    இப்போதைக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது இது ஒன்று தான். இவர்கள் இந்தியாவில் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்.

    ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவரான சையது சலாவுதீன் என்கிற முகமது யூசுப் ஷா அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது, கடத்தல், ஹவாலா பணபரிமாற்றம் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

    ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை பொறுத்தவரை, பாகிஸ்தான் குறைபாடுள்ள வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருகிறது.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    லண்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரானான். #DawoodIbrahim
    லண்டன்:

    1993-ம் ஆண்டில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

    துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நம்பப்படும் தாவூத் இப்ராஹிம் அங்கிருந்தவாறு கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களை செய்து வருகிறான்.

    மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிகளை செய்து ஆதரித்து வருகிறான். நிழல் உலக வாழ்க்கையான தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
     
    இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டிவாலா என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் கடந்த 19-ம் தேதி நியூ ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாகிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட ஜபிர் மோட்டிவாலா பத்தாண்டு காலத்துக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான்.


    தாவூத் இப்ராகிம் மட்டுமின்றி அவனது மனைவி மஹ்ஜபீன், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மஹ்ரூக், மெஹ்ரீன், மாஸியா, மருமகன்கள் ஜுனைத், அவுரங்கசிப்  ஆகியோரின் வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டிவாலா தான் கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவனிடம்  போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் மொத்த சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றிய ரகசியங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விசாரணை காலம் முடிந்து, சிறையில் இருந்தவாறு ஜபிர் மோட்டிவாலாவை போலீசார் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இன்றைய விசாரணையின்போது தனது பெயரை ஜபிர் சசிக் என்று மோட்டிவாலா தெரிவித்ததாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஜபிர் மோட்டிவாலா சார்பில் இன்று ஜாமின் மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அவன் மீதான வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டன. #DawoodIbrahim #JabirMoti #WestminsterCourt 
    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வரும் நிலையில் அவரது தாயின் நினைவாக கட்டிய 3 மாடி வீடு ஏலம் விடப்படுகிறது. #dawoodibrahim #Property
    மும்பை:

    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் இந்தியாவில் இருந்து தப்பி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனுக்கு 28 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

    தாவூத் இப்ராகிம்மை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் பாகிஸ்தான் அரசு தங்களிடம் தாவுத் இப்ராகிம் இல்லை என மறுத்துள்ளது.

    இதற்கிடையே மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இந்து மகாசபா வக்கீல் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.



    இந்த மனுமீது நீதிபதிகள் விசாரணை நடத்தி தாவூத் இப்ராகிம் சொத்துக்களை ஏலம்விட உத்தரவிட்டனர். அதன்படி தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. தாவூத் பயன்படுத்திய கார்கள் சில வகையான கட்டிடங்கள் ஏலம்விடப்பட்டன.

    மும்பையின் பாக்மோ டியா தெருவில் தாவூத் இப்ராகிம்க்கு சொந்தமான 3 மாடிக்கட்டிடம் உள்ளது. இங்குதான் தாவூத் இப்ராகிமின் தாயார் அமினா பி வசித்து வந்தார். இதனால் தாயாரின் நினைவாக அந்த கட்டிடத்துக்கு அமினா பி-என்ற பெயரை சூட்டியுள்ளான். தனது தாயை பொக்கி‌ஷமாக பாதுகாத்து வந்தான்.

    இந்த கட்டிடம் அடுத்த கட்டமாக ஏலத்துக்கு வருகிறது. இந்த கட்டிடத்தின் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.79.43 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்வோர் ரூ.25 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 31-ந்தேதி காலை யஷ்வந்த் ராவ் சவான் கலாச்சார மைய அரங்கத்தில் நடைபெறுகிறது.

    தற்போது ஏலத்துக்கு வந்த கட்டிடத்தின் எதிரே தம்பர்வாலா கட்டிடம் உள்ளது. இதில் தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் வசித்து வந்தார். எதிரில் உள்ள கட்டிடம் ஏலத்துக்கு வருவதால் இக்பால் கஸ்கக் மும்பை நாக்பாடாலில் வசிக்கும் சகோதரி ஹசீனா பார்க்கரின் வீட்டுக்கு மாறிவிட்டார்.

    இக்பால் இந்த ஆண்டு தொடக்கத்தில் பணம் பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.#dawoodibrahim #Property
    மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் இன்று அதிகாலை மீண்டும் தானே சிறையில் அடைக்கப்பட்டான். #DawoodIbrahims #IqbalKaskar
    மும்பை:

    260 உயிர்களை பறித்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர். கடந்த 2003-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தாவூத் கஸ்கர், மும்பை ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு தானே சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.


    இந்நிலையில், சிறையில் இருந்த இக்பால் கஸ்கர் நேற்றிரவு நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் இக்பால் கஸ்கர் மீண்டும் தானே சிறையில் அடைக்கப்பட்டான். #DawoodIbrahims #IqbalKaskar 
    ×