search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்சல் 6ஏ"

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. #OnePlus6T #smartphone



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடல் டீசர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சிறப்பம்சங்களை அந்நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இத்துடன் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களும் தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அக்டோபர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. உதை உறுதி செய்யும் வகையில் டீசர் படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது, இதில் ஸ்மார்ட்போனின் வெளியீடும் அதே தினத்தில் நடைபெறும் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.



    புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் "ஸ்கிரீன் அன்லாக்" என அழைக்கிறது. 

    “ஸ்கிரீன் அன்லாக் வசதி ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யும் வழிமுறையை வெகுவாக குறைக்கிறது. என்றாலும், டிஸ்ப்ளேவுடன் ஃபேஸ் அன்லாக் போன்ற வசதி இருந்தால், பயனர்களுக்கு வசதியான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.”

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு இருப்பதால் ஸ்மார்ட்போனில் புதிதாக அதிகளவு தொழில்நுட்பத்தை புகுத்த முடிந்தது என ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் தெரிவித்தார்.



    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6 மாடலில் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம். 

    விலையை பொருத்த வரை புதிய ஒன்பிளஸ் 6டி மாடல் அமெரிக்காவில் 550 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,718 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #OnePlus6T #smartphone
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடல் டீசர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. ஆசிய கோப்பை தொடரின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியின் போது இந்த விளம்பரம் ஒளிபரப்பனது. 

    விளம்பர வீடியோவில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடத்திருக்கிறார். ஒன்பிளஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோவில் வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் வளைந்த ஓரங்கள் இடம்பெற்றிருந்தது.



    பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஒப்போ ஆர்17 ப்ரோ போன்று மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படவில்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தொலைகாட்சி சேனல்களைத் தொடர்ந்து அமேசான் வலைத்தளத்திலும் ஒன்பிளஸ் 6டி டீசர் பதிவிடப்பட்டுள்ளது.

    புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை ஒன்பிளஸ் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. அந்த வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு, பெரிய பேட்டரி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus #earphones



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்ஸ் இன்-இயர் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இயர்போன்கள் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புல்லெட்ஸ் வி12 இயர்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் மட்டும் கிடையாது என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

    புதிய இயர்போன்களில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் மிகத்துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பு, கேபிள் உள்ளிட்டவை அரமிட் ஃபைபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் டைப்-சி புல்லெட்கள் இழுக்கப்படும் போது அதிக உறுதியாக இருக்கும்.

    சர்கஸ் லாஜிக் உடன் இணைந்து டி.ஏ.சி. கொண்டிருப்பதால் அதிக டைனமிக் ரேன்ஜ், சக்திவாய்ந்த பேஸ், சிகனல்-டு-நாய்ஸ் ரேஷியோ உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. டைப்-சி புல்லெட்கள் அனைத்து டைப்-சி போர்ட்களுடன் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஒன்பிளஸ் தவிர மற்ற மாடல்களுடனும் பயன்படுத்தலாம்.

    ஒன்பிளஸ் டைப்-சி புல்லெட்கள் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படுகிறது. இதன் விலை ரூ.1,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 6டி மாடலில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாக துவங்கிவிட்டன. புதிய 6டி ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் சார்ந்த விவரம் ஒன்பிளஸ் மூலம் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்கிரீன் அன்லாக் என அழைக்க இருக்கிறது. புதிய அம்சம் பின்புறம் கைரேகை சென்சார் வழங்குவதற்கான தேவை இருக்காது என்பதை தெரிவித்துள்ளது. 

    அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஸ்கிரீன் அன்லாக் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் இருக்கும். புதிய தகவலை வழங்கி இருப்பதோடு, சென்சார் எப்படி இருக்கும் என்பதையும் ஒன்பிளஸ் ஸ்கிரீன்ஷாட் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: CNET

    நாள் முழுக்க பலமுறை ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்கிறோம், ஸ்கிரீன் அன்லாக் இந்த வழிமுறை எண்ணிக்கையை குறைக்கிறது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக் வசதியை சேர்ப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் மொபைலை அன்லாக் செய்ய ஆப்ஷன்கள் கிடைக்கும்," என ஒன்பிளஸ் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரியவந்துள்ளது. 

    இத்துடன் அக்டோபர் 17 என்ற தேதியும் இடம்பெற்று இருப்பதால் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்கிரீன் அன்லாக் பெயரில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் விவோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹூவாய் நிறுவன மாடல்களுடன் இணைந்திருக்கிறது.
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Redmi6A #Redmi6pro



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.

    ரெட்மி 6ஏ மாடலில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22  பிராசஸர், 2 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.  



    ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS
    - 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.7,999 என்றும் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

    சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi.com தளத்தில் மட்டும் செப்டம்பர் 19-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் ரீடெயில் பெட்டி புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் தெரியவந்துள்ளது. #OnePlus6T



    ரஷ்யாவின் சான்று அளிக்கும் வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

    புதிய தகவல்களின் படி முன்பக்கம் வாட்டர் டிராப் வடிவிலான நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதேபோன்ற அம்சங்கள் ஒப்போ ஆர்17 / ஆர்17 ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    அட்டைப்பெட்டியின் பக்கவாட்டு மற்றும் உள்புறங்களில் "Unlock The Speed" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பிரான்டிங் மற்றும் "6" எண் வெளிப்புறம் அச்சிடப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 6டி மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 256 ஜிபி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒப்போ ஆர்17 போன்று பின்புறம் டூயல் கேமராக்களை வழங்குமா அல்லது ஆர்17 ப்ரோ மாடலை போன்று மூன்று கேமரா வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஒன்பிளஸ் 6 மாடல் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், ஒன்பிளஸ் 6டி மாடலில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. 
    சியோமி ரெட்மி சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #redmi6alaunch



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி நிறுவன துணை தலைவர் மற்றும் சியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 



    ரெட்மி 6 சீரிஸ் இல் ரெட்மி 6, ரெட்மி 6 ப்ரோ மற்றும் ரெட்மி 6ஏ மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முதற்கட்டமாக ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ மாடல்கள் அறிமுகமாகி அதன்பின் சிலவாரங்கள் கழித்து ரெட்மி 6 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ மாடல்களில் குவால்காம் பிராசஸர்கள் வழஙஅகப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 5 சீரிஸ் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த நிலையில், புதிய ரெட்மி 6 மாடல்களின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சீனாவில் ரெட்மி 6 விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,265), ரெட்மி 6ஏ விலை 599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,200) மற்றும் ரெட்மி 6 ப்ரோ விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,330) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் இந்திய விலை மற்றும் முழு விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
    கிறிஸ்டோபர் மிக்வாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஷன் இம்பாசிபிள்' படத்தின் விமர்சனம். #MissionImpossibleFalloutReview
    மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் நாயகன் டாம் க்ருசுக்கு ஒரு மிஷன் கொடுக்கப்படும். கடைசி பாகத்தில் தி சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். இந்த பாகத்தில் அந்த சிண்டிகேட் குழுவில் இருந்து சிதறிக் கிடக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களை தி அபோஸ்டில்ஸ் என்று கூறிக் கொள்கின்றனர். 

    இவ்வாறு பிரிந்து கிடக்கும் அந்த அமைப்பினர் மூன்று சக்தி வாய்ந்த ப்ளூட்டோனியம் அணுகுண்டுகளை வாங்க திட்டமிடுகின்றனர். அந்த அணுகுண்டு அவர்களிடம் செல்லாதவாறு தடுக்க வேண்டும் என்பது டாம் மற்றும் அவரது குழுவுக்கு வழங்கப்படும் மிஷன். 



    டாம் குரூஸ் தனது குழுவுடன் அந்த ப்ளூடோனியம் அணுகுண்டை கைப்பற்றுகிறார். இதில் தனது நண்பனை காப்பாற்றுவதற்காக அணுகுண்டை தவறவிடுகிறார். இந்த நிலையில், சிஐஏ அமைப்பின் பார்வையில் டாம் க்ரூஸ் குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இதற்கிடையே கடைசி பாகத்தில் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பினர் நிபந்தனை வைக்கின்றனர். 

    தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், ப்ளூட்டோனியம் அணுகுண்டை வெடிக்க வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். கடைசியில், டாம் க்ரூஸ் தனது குழுவுடன் எதிரிகளின் திட்டத்தை முறியடித்தாரா? சீன் ஹாரிஸ் விடுவிக்கப்பட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    டாம் க்ரூஸ் வழக்கம் போல் இந்த பாகத்திலும் தனது ஆக்‌ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் அதகளப்படுத்தி இருக்கிறார். இத்தனை வயதிலும் இளமையானவர் போல் அவர் செய்யும் சாகசங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சூப்பர் மேனாக அனைவரது இதயங்களை கவர்ந்த ஹென்றி கேவில் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். சிமான் பெக் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

    மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் மிஷனை மேற்கொள்ளும் குழுவுக்கு கடைசியில் வெற்றி தான் கிடைக்கும். ஆனால் அந்த வெற்றியை எட்டிப் பறிப்பது என்பது எளிமையாக இருக்காது. பல்வேறு சாகசங்கள் மூலம் டாம் க்ரூஸ் தனது குழுவினருடன் வெற்றிக் கனியைப் பறிப்பார். அந்த வகையில் இந்த பாகத்தில் ஆங்காங்கு பழைய நியாபங்களை காட்டியிருப்பது உணர்ச்சிப்பூர்வமாக காட்டியும், ஆக்‌ஷன், அடுத்தடுத்த காட்சிகள் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் மிக்வாரி. மிஷன் இம்பாசிபிள் தீமுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.



    ஜோ க்ரேமர், கோமேல் ஷானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ராப் ஹார்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `மிஷன் இம்பாசிபிள்' ஆக்‌ஷன் அதிரடி. #MissionImpossibleFalloutReview #TomCruise

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே மாதம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இவை சுமார் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. #galaxyj8 #GalaxyJ6



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த மாதம் அறிமுகமான நிலையில் இதுவரை சுமார் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 50,000 வாடிக்கையாளர்களை இவை கவர்ந்திருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஜெ8 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களில் சாட்-ஓவர்-வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சாம்சங்கின் நொய்டா ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

    சாட்-ஓவர்-வீடியோ அம்சம் இயக்கப்பட்டால், மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டே நண்பர்களுடன் சாட் செய்யலாம். அதாவது வீடியோ பார்க்கும் போது, அதன் மேல் கண்ணாடி வடிவில் கீபோர்டு தெரியும். இதனால் வீடியோவை பார்த்துக் கொண்டே சாட்டிங் செய்யலாம்.



    கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14என்.எம். சிப்செட், கேலக்ஸி ஜெ8 மாடலில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த சாம்சங்கின் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ், F/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. 

    கேலக்ஸி ஜெ8 மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #galaxyj8 #GalaxyJ6
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலை சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலின் ரெட் நிற வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்தது. முன்னதாக மிரர் பிளாக், சில்க் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.

    தற்சமயம் ட்விட்டரில் 'ஐஸ் யுனிவர்ஸ்' என அறியப்படும் பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 6 புதிய வேரியன்ட்களில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இத்துடன் பர்ப்பிள் நிறத்திலும் ஒன்பிளஸ் 6 அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய ஒன்பிளஸ் 6 ஹூவாய் P20 போன்று கிரேடியன்ட் நிறம் கொண்ட வெர்ஷன் வெளியிடப்படலாம் என தெரிவித்திருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஃபைபர் போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பிளாக் நிற வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய நிற வெர்ஷன்கள் ஒன்பிளஸ் 6 என்ட்ரி லெவல் மாடலான 6 ஜிபி ரேம் வேரியன்ட்-இல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட் நிற ஷேட் பெற சில காலம் ஆன நிலையில், புதிய நிறங்கள் வெளியாகவும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான சிவப்பு நிறத்தை பெற கடினமாக உழைத்திருக்கிறோம், இதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டது என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பதோடு, கைரேகை சென்சார் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஆன்6 சிறப்பம்சங்கள்:

    - 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
    - மாலி T830 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் புளு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மற்றும் சாம்சங் ஷாப் ஆன்லைன் தளங்களில் ஜூலை 5-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ.14,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஜூலை 2-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், தனது புதிய கேலக்ஸி ஆன் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜுலை 2-ம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய கேலக்ஸி ஆன் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கென  பிரத்யேக வலைப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பக்கத்தில் ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் நடிகர் டைகர் ஷ்ராஃப் விளம்பர தூதராக இருக்கிறார். மேலும் இதில் மூன்று டீசர் வீடியோக்கள் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஆன்6 என அழைக்கப்படும் என்றும் இதில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இத்துடன் கேலக்ஸி ஆன்6 மாடலில் சாட் ஓவர் வீடியோ அம்சம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த அம்சத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பார்த்து கொண்டே சாட் செய்ய முடியும். விலையை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி6 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ×