search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்சல் 6ஏ"

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல்கள் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களும் இனி ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என சியோமி இந்தியா அறிவித்துள்ளது.

    ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி 6ஏ 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் அமேசான் தளத்தில் ரூ.6,999 விலையில் ஓபன் சேல் முறையில் கிடைக்கிறது. எனினும் இதன் 16 ஜி.பி. ரேம் ரூ.5,999 விலையில் நவம்பர் 14ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று ரெட்மி 6 3ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,499 விலையில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. வெர்ஷன் ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை சியோமியின் அதிகாரப்பூர்வ mi.com வலைதளத்திலும் கிடைக்கிறது. #Xiaomi #smartphone
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் மற்றொரு நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #nokia6



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்குகிறது. முன்னதாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் வரும் தினங்களில் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு பை ஸ்டேபிள் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனுக்கான ஆன்ட்ராய்டு பை அப்டேட் அடுத்த மாத வாக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ஆன்ட்ராய்டு பை அப்டேட் மூலம் நோக்கியா 6.1 மாடலில் அடாப்டிவ் பேட்டரி, ஸ்லைசஸ், மேம்படுத்தப்பட்ட நேவிகேஷன் ஜெஸ்ட்யூர்கள் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. 



    நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #oneplus6t



    ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, சிறிய நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி மாடலில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது, எனினும் IP சான்றிதழ் எதுவும் பெறவில்லை.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், F/1.7 அப்ரேச்சர், OIS, 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர், 16 எம்.பி. சோனி IMX371 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

    - 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
    - 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
    - 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.41,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.45,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 1ம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான், ஒன்பிளஸ் விற்பனையகங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா விற்பனையகங்களில் நவம்பர் 3ம் தேதி முதல் நடைபெறுகிறது.



    அறிமுக சலுகைகள்

    - அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் 6டி வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - அமேசான் வலைதளத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி.

    - நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதிக்குள் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பிரீபெயிட் முறையில் கட்டணம் செலுத்தும் போது ரூ.1000 கேஷ்பேக் அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படுகிறது.

    - ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன இணை நிறுவனர் அறிவித்துள்ளார். #OnePlus



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த புரளிகளுக்கு, ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் பதில் அளித்திருக்கிறார்.

    அதன்படி ஹாங்காங் நகரில் நடைபெற்ற 4ஜி/5ஜி உச்சிமாநாட்டில் கால் பெய், அடுத்த ஆண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிடும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக ஒன்பிளஸ் இருக்கும் என தெரிவித்தார். 



    மேலும் ஆகஸ்டு மாதத்தில் குவால்காம் தலைமையகத்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் வெளியிடும் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும் இது 2019-ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் சமீபத்திய QT052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் தவிர அசுஸ், ஃபுஜிட்சு, ஹெச்.எம்.டி. குளோபல், ஹெச்.டி.சி., இன்சீகோ/நோவாடெல் வயர்லெஸ், எல்.ஜி., மோட்டோரோலா, நெட்காம் வயர்லெஸ், நெட்கியர், ஒப்போ, ஷார்ப், சியெரா வயர்லெஸ், சோனி மொபைல், டெலிட், விவோ, டபுள்யூ.என்.சி. மற்றும் சியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் 2019-ம் ஆண்டு 5ஜி பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், X50 5ஜி என்.ஆர். மோடெம்களை சோதனை செய்ய துவங்கி இருக்கின்றன.



    குவால்காம் நிறுவன சிப்செட் முதல்முறையாக Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்றும், இது 5ஜி வசதி கொண்ட வணிக ரீதியிலான முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். சியோமி மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து பல்வேறு இதர நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை 2019-ம் ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக குவால்காம் நிறுவன தலைவர் கிரிஸ்டியானோ அமோன், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் இருபெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனகளில் 5ஜி தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என்றும், இதில் ஒரு மாடல் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் மற்றொன்று விடுமுறை காலத்திலும் அறிமுகமாகலாம் என தெரிவித்தார். #OnePlus #5G #Smartphones
    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு பை இயங்குதளம், 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. #OnePlus6T
    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை புதிய ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒன்பிளஸ் 6டி ஸ்மாரட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. கீக்பென்ச் வலைதளத்தில் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

    இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: WinFuture.de

    புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம். ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இத்துடன் முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது.

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. #OnePlus6T
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அக்டோபர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் நடைபெற அறிமுக விழாவில் பங்கேற்க நுழைவு கட்டணமாக ரூ.999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி முதல் நுழைவு சீட்டுக்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவில் கலந்து கொள்வோர் புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி பார்க்க முடியும். மேலும் விழாவில் கலந்து கொள்வோருக்கு பரிசு கூப்பன் மற்றும் புல்லெட்ஸ் வயர்லெஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் 6டி அறிமுக விழா வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது.



    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்கிரீன் அன்லாக் என அழைக்கிறது. ஸ்கிரீன் அன்லாக் தொழில்நுட்பம் மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.



    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரூ.5000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. #AmazonGreatIndianFestival #OnePlus



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் அக்டோபர் 16-ம் தேதி வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் வாங்க நினைப்போருக்கு அமேசான் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அமேசான் தளத்தில் அக்டோபர் 10-ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 குறைக்கப்படுகிறது.



    அந்த வகையில் ஒன்பிளஸ் அறிமுகம் செய்து விற்பனையாகி வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6 ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.5000 தள்ளுபடியோடு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது பிரத்யேக தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



    ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம் 
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் மற்றும் ஆம்பர் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #AmazonGreatIndianFestival #OnePlus6
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் உறுதியாகியுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய வீடியோ டீசரின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதி செய்துள்ளது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்கிரீன் அன்லாக் என அழைக்கிறது.

    ஸ்கிரீன் அன்லாக் தொழில்நுட்பம் மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. இந்த அம்சம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனின் கீழ் பொருத்தப்பட்ட ஆப்டிக்கல் கைரேகை மாட்யூல் மூலம் கைரேகைகளை அறிந்து கொள்கிறது.



    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.

    இது ஏற்கனவே வெளியான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. லீக் ஆகியிருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 6டி மாடலில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல்முறையாக நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கி இருந்தது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் புதிய வகை நாட்ச் வழங்க இருக்கிறது.



    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம்.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ப்ரோ 6, சர்ஃபேஸ் லேப்டாப் 2, சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 மற்றும் புதிய சர்ஃபேஸ் ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Microsoft



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் ப்ரோ 6, சர்ஃபேஸ் லேப்டாப் 2, சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 மற்றும் புதிய சர்ஃபேஸ் ஹெட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    சர்ஃபேஸ் ப்ரோ 6 மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் குவாட் கோர் பிராசஸர்களுடன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள் சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    சர்ஃபேஸ் லேப்டாப் 2 மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் குவாட் கோர் பிராசஸர்களுடன் பிளாட்டினம், பர்கன்டி மற்றும் கோபால்ட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் 14.5 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் வேகமான மற்றும் சத்தமில்லா டைப்பிங் அனுபவம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 6 (2018) சிறப்பம்சங்கள்

    - 12.3 இன்ச் 2736x1824 பிக்சல் 3:2 பிக்சல் சென்ஸ் 10 பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - 8th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், UHD கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. அல்லது 16 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. (எஸ்.எஸ்.டி)
    - 8.0 எம்.பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி
    - 5.0 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி
    - வைபை, ப்ளூடூத், ஃபுல்-சைஸ் யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர், மினி டிஸ்ப்ளே போர்ட்
    - 1.6W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ பிரீமியம், ஸ்டீரியோ மைக்ரோபோன்
    - அதிகபட்சம் 13.5 மணி நேர வீடியோ பிளேபேக்



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 2 சிறப்பம்சங்கள்

    - 13.5 இன்ச் 2256x1504 பிக்சல், பிக்சல் சென்ஸ் 10 பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 8th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், UHD கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. அல்லது 16 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. (எஸ்.எஸ்.டி)
    - விண்டோஸ் 10
    - 720 பிக்சல் ஹெச்.டி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ மைக்ரோபோன், ஆம்னிசோனிக் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம்
    - வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர், மினி டிஸ்ப்ளே போர்ட், சர்ஃபேஸ் கனெக்ட்
    - அதிகபட்சம் 14.5 மணி நேர வீடியோ பிளேபேக்

    சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 ஆல்-இன்-ஒன் பி.சி. 50% அதிக கிராஃபிக்ஸ் செயல்திறன், 28" பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி.-சி சப்போர்ட், எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் பில்ட்-இன் கேமிங்-கிளாஸ் செயல்திறன் கொண்டுள்ளது. இந்த கம்ப்யூட்டருடன் சமீபத்திய சர்ஃபேஸ் பென் சாதனத்துடன் வருகிறது. புதிய சர்ஃபேஸ் பென் டில்ட் ஸ்டேபிலிட்டி மற்றும் 4096 பிரெஷர் கொண்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 சிறப்பம்சங்கள்

    - 28 இன்ச் 4500x3000 பிக்சல், பிக்சல்சென்ஸ் மல்டி-டச் 3:2 டிஸ்ப்ளே
    - இன்டெல் கோர் 7th Gen i7-7820HQ பிராசஸர்
    - NVIDIA GeForce GTX 1060 6 ஜி.பி. GDDR5 கிராஃபிக்ஸ் / GTX 1070 8 ஜி.பி. GDDR5 கிராஃபிக்ஸ்
    - 16 ஜி.பி. அல்லது 32 ஜி.பி. ரேம்
    - 1000 ஜி.பி. அல்லது 2000 ஜி.பி. சாலிட்-ஸ்டேட் டிரைவ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - சர்ஃபேஸ் பென், ஜீரோ கிராவிட்டி ஹின்ஜ்,, TPM 2.0 சிப்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ 2.1 ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், டூயல் மைக்ரோபோன்கள்
    - 4 x யு.எஸ்.பி. 3.0, ஃபுல்-சைஸ் எஸ்.டி. கார்டு ரீடர், 1 x யு.எஸ்.பி.-சி, 1 ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட்
    - வைபை, ப்ளூடூத், எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் பில்ட்-இன்



    புதிய சர்ஃபேஸ் ஹெட்போன்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மற்றும் ஸ்மார்ட் ஹெட்போன்களாக இருக்கின்றன. இதில் தரமான ஆடியோ மற்றும் 40 எம்.எம். ஃப்ரீ எட்ஜ் டிரைவர், ஹேன்ட்ஸ்-ஃப்ரீ காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நாய்ஸ் கான்செலேஷன், ஆட்டோமேடிக் பாஸ் மற்றும் பிளே அம்சம் கொண்டுள்ளது.

    இத்துடன் பில்ட்-இன் கார்டனா டிஜிட்டல் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் யு.எஸ்.பி.-சி கனெக்டர் மூலம் சார்ஜிங் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ கனெக்டர் உள்ளிட்டவை கொண்டுள்ளது. இதன் பேட்டரி 15 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை உற்பத்தி செய்யும் பணியை சியோமியிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Xiaomi



    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களை வடிவமைத்து வழங்கும் வின்டெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும் வின்டெக் உற்பத்தி செய்யும் முதல் சாம்சங் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ6எஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வின்டெக் உற்பத்தி செய்யும் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகிவருகிறது. இதேபோன்று ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளியானது. இதேபோன்று கேலக்ஸி P30 ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் லீக் ஆனது, பின் இந்த ஸ்மார்ட்போன் தான் கேலக்ஸி ஏ6எஸ் என கூறப்பட்டது.



    புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் வின்டெக் உற்பத்தி செய்யும் மாடல் அதன் லோகோவுடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய திட்டத்தின் மூவம் சாம்சங் நிறுவனம் உற்பத்தி கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் என கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இருநிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.




    சமீபத்தில் சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா செட்டப் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் லென்ஸ், 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் கண்களை கொண்டு பார்க்கும் காட்சியை அப்படியே படம்பிடிக்க முடியும்.

    முன்பக்கம் 12 எம்.பி. கேமரா சென்சார் மற்றும் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குறைவான வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் ஏ.ஆர். எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 6டி விவரங்கள் இணையத்தில் அதிகளவு லீக் ஆகிவருகிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இரண்டு புதிய நிறங்களை கொண்டிருப்பது சமீபத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.

    இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.


    புகைப்படம் நன்றி:  WinFuture

    இது ஏற்கனவே வெளியான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. லீக் ஆகியிருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 6டி மாடலில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல்முறையாக நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கி இருந்தது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் புதிய வகை நாட்ச் வழங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம்.
    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரங்கள் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படத்தின் படி புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. இது முந்தைய ஒன்பிளஸ் 6 மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட அதிகம் ஆகும். ஒன்பிளஸ் 6 மாடலில் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டது. 

    மேலும் இணையத்தில் லீக் ஆகியிருக்கும் ரென்டர்களில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் வாட்டர்டிராப்-வடிவம் கொண்ட நாட்ச் மற்றும் பக்கவாட்டுகளில் மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு கொண்டிருக்கும். 



    வெய்போவில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 6டி மாடலில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பேட்டரி மாடல் நம்பர், திறன் மற்றும் ஒன்பிளஸ் சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம். 
    ×