search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை பெரியாறு அணை"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி.
    • வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கி சாரல் மழையாக பல இடங்களில் இடைவிடாமல் பெய்த நிலையில் இரவில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக போடி, பெரியகுளம், தேவதான ப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே சோத்துப்பாறை அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வராக நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி. வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடி. வரத்து 182 கன அடி. திறப்பு 40 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.94 அடி. வரத்து 469 கன அடி. திறப்பு 30 கன அடி.

    தேக்கடி 17, போடி 62.6, வைகை அணை 5.4, சோத்துப்பாறை 72, மஞ்சளாறு 70, பெரியகுளம் 4, வீரபாண்டி 12.4, அரண்மனைபுதூர் 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளிதரன் அறிவித்துள்ளார்.

    • பெரியாறு என்ற பெயரில் உள்ள ஆவண படத்தில் அணை உடைந்து ஏராளமான கேரள மக்கள் பலியாவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
    • விஷம பிரசார குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளது.

    அணையை கண்காணிப்பதற்காக மூவர் குழு அவர்களுக்கு துணையாக 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. பருவமழை காலத்தில் அணைப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். இதில் அணை உறுதியாக உள்ளது என பல முறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்பினர் முல்லைப்பெரியாறு அணை குறித்து அவ்வப்போது விஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு டேம்-999 என்ற ஆவண படம் வெளியிடப்பட்டது. இதில் முல்லைப்பெரியாறு அணை உடைவதுபோன்று கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து பாடல்களை வெளியிட்டனர். கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல்ஜோய் அணை உடைந்து விடும் எனவே புதிய அணை கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்.

    இந்நிலையில் அவர் சார்பில் புதிய குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாறு என்ற பெயரில் உள்ள ஆவண படத்தில் அணை உடைந்து ஏராளமான கேரள மக்கள் பலியாவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த விஷம பிரசார குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக-கேரள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தமிழக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். இது குறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், கேரள மக்களிடையே பெரியாறு அணை குறித்து பொய் பிரசாரம் செய்து வரும் சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பு மற்றும் அதன் தலைவர் ரசூல்ஜோயை வண்மையாக கண்டிக்கின்றோம்.

    உச்ச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகளும், 7 நீர்பாசன தலைமை பொறியாளர்களும் தலைசிறந்த அணை வல்லுனர்களும் சேர்ந்து முல்லைப்பெரியாறு அணையை சோதனை செய்து அணை பலமாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் அணை நீர்மட்டத்தை 142 வரை உயர்த்த உத்தரவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் இருமாநில மக்களின் நல்லுறவை கெடுக்கின்ற வகையிலும் பிரிவினையை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பெரியாறு குறும்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்களை தேசிய பாதுகாபாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

    சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பினர் ஆவண படம் தயாரிக்க ரூ.30 லட்சம் தேவை என்றும் அதற்கு நன்கொடை அனுப்பி வைக்குமாறு வங்கி கணக்கை தொடங்கி வசூல் வேட்டையை தொடங்கினர். இதை அறியாத சிலர் அவர்களுக்கு நன்கொடை வழங்கினர். வெளிநாடு வாழ் கேரள மக்களிடமும் நிதி வசூல் செய்ய முயன்றனர். ஆனால் இவர்கள் போலி பிரசாரம் செய்வதால் யாரும் பணம் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேகமலை, ஹைவேவிஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் இருந்தபோதும் மாலை நேரங்களில் திடீரென மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

    தேவதானப்பட்டி பகுதியில் நேற்றிரவு சாரலாக தொடங்கி விடிய விடிய பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டி வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளான ஜெயமங்கலம், சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி, கல்லுப்பட்டி, மேல்மங்கலம், மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. மஞ்சளாறு அணையின் முழுகொள்ளளவு 57 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பே முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் உபரியாக திறக்கப்பட்டு வருகிறது. தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் 90 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    இதனால் மஞ்சளாற்று கரையோரம் உள்ள திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க வேண்டாம். துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதேபோல் கொட்டக்குடி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பிள்ளையார் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியிலும் 2-வது நாளாக தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். வராக நதியிலும் இருகரைகளை ஒட்டியவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    மேகமலை, ஹைவேவிஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1426 கனஅடியில் இருந்து 2272 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 1300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 67.39 அடியாக உள்ளது. நேற்று 943 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 1383 கனஅடியாக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக 899 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.73 அடியாக உள்ளது. 15 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகளை கண்காணித்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். எனவே நாளை மறுநாள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போடி, குரங்கனி, மேலப்பரவு, கொட்டக்குடி, ஊத்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் மீனாட்சியம்மன்குளம், பங்காருசாமி குளம் உள்ளிட்ட குளம் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பெரியாறு 19.6, தேக்கடி 16.4, கூடலூர் 7.2, உத்தமபாளையம் 5.6, வீரபாண்டி 13, வைகை அணை 24.2, மஞ்சளாறு 105, சோத்துப்பாறை 26, ஆண்டிபட்டி 40.2, அரண்மனைப்புதூர் 4, போடி 15.4, பெரியகுளம் 5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. 1258 கனஅடிநீர் வருகிறது.
    • அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    மழைப்பொழிவு குறைந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. எனவே 2-ம் போக நெல்சாகுபடியை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். வைகை அணையில் நீர்மட்டத்தை நிலை நிறுத்த முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

    மேலும் நீர்திறப்பை படிப்படியாக குறைத்தனர். நேற்று 1555 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 1400 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. 1258 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, 10 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தமிழக பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும்.
    • கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க 2-வது சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நீதிமன்றம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்தியபின் முழு கொள்ளளவான 152 அடி நீர்தேக்கி கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் 2014 ஆண்டில் இருந்து 142 அடிக்குமேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரளா பகுதிக்கு வீணாக திறக்கப்பட்டு வருகிறது.

    தமிழக பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இந்த தண்ணீர் லோயர் கேம்ப் மின்உற்பத்திக்கு 4 ராட்சதகுழாய் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் வெளியேறும். இதைவிட கூடுதல் நீர் திறக்க வாய்ப்பில்லை.

    எனவே தமிழகப்பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து இதைவிட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் வீணாக கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற வேண்டிய அவசியமில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க 2-வது சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் லோயர் கேம்பில் இருந்து ராமநாதபுரம் வரை 259 கி.மீ. தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.

    எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.

    அப்போது அரசு தரப்பில், சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 6 கன அடி நீர் வருகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.46 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது.

    கடந்த மாதம் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 140 அடியை எட்டியது. ஆனால் ரூல்கர்வ் முறையை காரணம் காட்டி கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியாக சரிந்துள்ளது. நேற்று நீர்வரத்து 1126 கன அடியாக இருந்தது. இன்று காலை 366 கன அடியாக குறைந்துள்ளது.

    இதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 933 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. முல்லை பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    71 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 70.08 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 1515 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 6 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 46 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால் ரூல்கர்வ் முறைப்படி தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியாது என்பதால் அணையில் இருந்து கேளர பகுதிக்கு வீணாக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றபட்டது.

    இந்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1793 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ளது.

    இதனால் கேரள பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு தமிழக பகுதிக்கு மட்டும் 2172 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.54 அடியாக உள்ளது. 1977 கன அடி நீர் வருகிறது. 2969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 46 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது.

    • தற்போது கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆல்பம் பாடல் தயாரித்து பரப்பி வருகின்றார்.
    • அணை உடைந்து கேரளா தண்ணீரில் மூழ்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சியும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைபெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம். மேலும் பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 வரை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தீர்ப்புக்கு பின்னர் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கேரளஅரசு மற்றும் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் சிலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிரசாரம் மற்றும் வீடியோ ஆல்பங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்த நிலையில் ரூல்கர்வ் முறையால் கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை உடைவது போன்று கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டு கேரள மக்களை அச்சுறுத்தினர். இந்த நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆல்பம் பாடல் தயாரித்து பரப்பி வருகின்றார். அணை உடைந்து கேரளா தண்ணீரில் மூழ்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சியும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    இந்திய இறையாண்மைக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள பிரச்சினைக்குரிய வீடியோ குறித்து கேரள அரசு கண்டுகொள்ளவில்லை.

    இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவில் முல்லைபெரியாறு அணையை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். மேலும் சிலர் தங்கள் பிரபலமாவதற்கு இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். 142 வரை தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதன்பிறகு பலமுறை 142 வரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் சிலர் கேரள மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதும், வீடியோ ஆல்பம் வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர் என்றனர்.

    • பெரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதையடுத்து வல்லக்கடவு பகுதியில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசிஅகஸ்டின், பீர்மேடு எம்.எல்.ஏ, வாழூர்சோமன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது இவர்கள் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    கேரளாவில் கடந்த ஜூன்மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக அதிகரித்து கடந்த 2 வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

    நேற்று 137.50 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 138.05 அடியாக உயர்ந்தது. ரூல்கர்வ் விதிமுறைப்படி ஆகஸ்டு 10 வரை 137.50 அடியாக நீர்மட்டத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் அணையை ஒட்டியுள்ள 10 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரள பகுதிக்கு 2228 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தமிழக பகுதிக்கு 2122 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 6603 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நீர் இருப்பு 6634 மி.கனஅடியாக உள்ளது.

    நீர்வரத்தை கேரள பகுதிக்கு திறக்கும் பணியில் தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர். 2021-ம் ஆண்டு அக்.29-ல் அணையின் நீர்மட்டம் 138 அடியானதால் தற்போதும் அதேஅளவுக்கு நீர்மட்டம் உள்ளது. இதனால் கேரள பகுதிக்கு தொடர்ந்து நீர்திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இடுக்கி மாவட்டத்தின் வல்லக்கடவு, வண்டிபெரியார், சப்பாத்து ஆகிய பகுதிகளுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் குளிப்பது, மீன்பிடிப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபாஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.

    பெரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதையடுத்து வல்லக்கடவு பகுதியில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசிஅகஸ்டின், பீர்மேடு எம்.எல்.ஏ, வாழூர்சோமன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது இவர்கள் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர். அதேபோல நேற்றும் தேக்கடி வந்த அமைச்சர் பெரியாறு அணைக்கு செல்லாமல் வல்லக்கடவு பகுதியிலேயே நின்று தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.

    இதுகுறித்து கேரள தரப்பில் கேட்டபோது, பெரியாறு அணை பகுதிகளுக்கு அமைச்சர் வர அனுமதி தரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவிக்கையில், ரூல்கர்வ் நடைமுறையால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முல்லைபெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள அரசை கண்டித்து கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

    வைகை அணை நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. வரத்து 2983 கனஅடி, திறப்பு 3502 கனஅடி, இருப்பு 5829 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 184 கனஅடி, இருப்பு 435 மி.கனஅடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.54 அடி, வரத்து 162 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.

    பெரியாறு 12.4, தேக்கடி 11.6, கூடலூர் 4.8, உத்தமபாளையம் 5.2, வீரபாண்டி 10, வைகை அணை 1.2, பெரியகுளம் 4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 13 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
    • இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    சென்னை:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி உள்ள நிலையில் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 'ரெட்' அலர்ட் விடுத்துள்ளது. அதற்கேற்ப மழை பெய்கிறது.

    இதே நிலை நீடித்தால் அணையின் நீர் மட்டம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இப்போது அணைக்கு அதிகளவு நீர் வரத்து உள்ளது.

    எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த விசயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேறும் நீர் வெளியேற்றம், உபரி நீரை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய படிப்படியாக திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அணையின் ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
    • தொடர்ந்து வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் உபரியாக 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது. இடுக்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 2,000 கன அடி வரை மட்டுமே இருந்தது.

    கடந்த 2 நாட்களாக மழை அதிகரித்ததால் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணிக்கு 2,831 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலை 3 மணிக்கு 6,231 கன அடியாக அதிகரித்தது. இதனால் காலையில் 135.15 அடியாக இருந்த நீர் மட்டம் மாலை 7 மணிக்கு 136 அடியை எட்டியது.

    152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் தற்போது 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதுவும் ரூல் கர்வ் முறைப்படி தற்போது தேக்க முடியாது.

    இன்று காலை அணைக்கு நீர் வரத்து 7200 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் 136.95 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக 1866 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நீர் இருப்பு 6357 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 136 அடியை கடந்ததும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டி பெரியாறு, வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளனர். இன்று அணையின் நீர் மட்டம் 137.5 அடியை எட்டினால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும். இதனால் 'ரூல் கர்வ்' நடைமுறையை கைவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் உபரியாக 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 70.01 அடியாக உள்ளது. வரத்து 3432 கன அடி. திறப்பு 2656 கன அடி. இருப்பு 5829 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டியதால் 55 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வரத்து 196. இருப்பு 435.32. சோத்துப்பாறை நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.82 அடியில் உள்ளது. வரத்து 272 கன அடி, திறப்பு 3 கன அடி. இருப்பு 40 மி.கன அடி.

    பெரியாறு 75.4, தேக்கடி 42, கூடலூர் 8.6, உத்தமபாளையம் 12.5, வீரபாண்டி 10, வைகை அணை 3, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 10, அரண்மனைபுதூர் 2.4, போடி 6.2, பெரியகுளம் 10 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாகவும், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 60.99 அடியாக உள்ளது. வரத்து 1830 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3789 மி.கனஅடி.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 135.90 அடியாக உயர்ந்தது. 136 அடியை எட்டும் என்று எதிர்பார்த்து இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு மழை குறைந்ததாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. வரத்து 1262 கனஅடி, நேற்று வரை 2016 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1976 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5784 மி.கனஅடி.

    இதேபோல் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாகவும், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 60.99 அடியாக உள்ளது. வரத்து 1830 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3789 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.70 அடி, வரத்து 21 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 71.01 அடி, வரத்து 1 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    பெரியாறு 20, தேக்கடி 7.4, கூடலூர் 1.5, உத்தமபாளையம் 1.4, மஞ்சளாறு 5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×