search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    136 அடியாக குறைந்த நீர்மட்டம்- முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    136 அடியாக குறைந்த நீர்மட்டம்- முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 6 கன அடி நீர் வருகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.46 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது.

    கடந்த மாதம் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 140 அடியை எட்டியது. ஆனால் ரூல்கர்வ் முறையை காரணம் காட்டி கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியாக சரிந்துள்ளது. நேற்று நீர்வரத்து 1126 கன அடியாக இருந்தது. இன்று காலை 366 கன அடியாக குறைந்துள்ளது.

    இதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 933 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. முல்லை பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    71 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 70.08 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 1515 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 6 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×