search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி கமல்நாத்"

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத், மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த  கமல்நாத் பதவிவகித்து வருகிறார். இவர் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இதற்கிடையே, சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தனது மகன் நகுல் நாத்தை களமிறக்கி உள்ளார் கமல்நாத்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத்,  மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனோரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்நாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிராந்தியத்துடன் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

    நகுல் நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். உங்களுக்கு பணியாற்றுவதற்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேவையாற்றவில்லை என்றால், அவரது உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    மத்தியப்பிரதேச முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் கமல்நாத்.

    முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் இருந்து வருகிறார். இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து ஷோரூம் ஒன்றிலும் மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவியேற்ற கமல்நாத், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    போபால்:

    மத்திய பிரதேசத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    காங்கிரஸ் சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட கமல்நாத் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    ×