search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஞ்சிறை"

    • ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    நாகர்கோவில்:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய

    ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,

    பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காண்டிராக்டர் மீது வழக்கு
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி.

    இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில சாலை பணி களை காப்புக்காடு பகுதி கோணத்து விளையை சேர்ந்த பிரிங்கோ ஸ்டான்லி (வயது 35) என்பவர் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.

    இதில் குறிப்பிட்ட சாலை பணிகளை 2 மாதத்தில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட சாலை பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

    இதையடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்காதது குறித்து தலைவர் ராஜேஸ்வரி, ஒப்பந்ததாரரிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர் ஸ்டான்லி, நேற்று தலை வரின் அறைக்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் சுனில்குமார், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×