search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நுகர்வோர்"

    • அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.
    • மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    அவினாசி :

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரின் குறைகளை நேரில் கேட்டறிந்து வருகிறார்.

    அந்த வகையில் நாளை (புதன்கிழமை) அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் கலந்துகொண்டு மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

    செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் பூவேஸ் ராஜமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மின் நுகர்வோர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் கிராம மக்களிடம் உதவி செயற்பொறியாளர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அதிகாரியிடம் குற்றம் சாட்டினர்.

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தெரிவித்தார்.

    • மின் வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மதுரை

    உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் நாளை (31-ந்தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

    இதில் செயற்பொறியாளர் மங்களநாதன் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்கிறார்.

    இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    • மதுரை தெற்கு கோட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை 

    மதுரை தெற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மதுரை பெருநகர் மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.
    • முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலைரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின் இணைப்புகளில் விநியோக குறைபாடு, இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.இந்த முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.

    • பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் மானூர்பாளையம் பிரிவு அலுவலகதிற்குட்பட்ட காசிலிங்கபாளையம்,நிறையூர் மேற்கு சடையபாளையம் ஆகிய மின் பகிர்மான அலுவலகத்திற்குட்ட பகுதி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதம் கணக்கீட்டு பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
    • மின்சார வாரிய அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்குஅவினாசி மின்சார வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். எனவே இந்த கூட்டத்தில் அவினாசி சுற்றுவட்டார பகுதி மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை,கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மேலூர் தெற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (8-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

    சிவகங்கை

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் (பகிர்மானம்) தலைமையில் காரைக்குடி கோட்டத்தில் நடைபெறுவதால் அக்கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×