மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை தெற்கு கோட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை 

மதுரை தெற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மதுரை பெருநகர் மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com