search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹிந்திரா"

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடல் தற்போது ஐந்து வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய XUV300 மாடலின் W8 (O) AT வேரியன்ட் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை W2 மற்றும் W4 என்று அழைக்கப்படுகின்றன. புதிய மஹிந்திரா XUV300 மாடல்களின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகின்றன. புது வேரியன்ட்களின் மூலம் மஹிந்திரா XUV300 மாடல் W2, W4, W6, W8 மற்றும் W8 (ஆப்ஷனல்) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றில் மஹிந்திரா XUV300 மாடலின் W4 வேரியன்ட்-இல் சன்ரூஃப், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. W4 டர்போ ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த என்ஜின் 129 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும். முன்னதாக இந்த என்ஜின் W6 வேரியன்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போதைய புது வேரியன்ட்கள் மூலம் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் W8 (O) AT வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 59 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மஹிந்திரா தார்.இ மாடலின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • தார்.இ மாடலில் 60 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N சார்ந்த பிக்கப் டிரக் மாடலை ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய டீசரில் தார் எஸ்யுவி-யின் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் தார்.இ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.

    டீசரில் தார் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் மாடிஃபை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வெர்ஷனின் செங்குத்தாக இருக்கும் டெயில் லேம்ப், சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், தார்.இ பேட்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மஹிந்திரா BE Rall-E மாடலை போன்றே தார்.இ மாடலிலும் 60 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் தார்.இ மாடல் லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தார்.இ கான்செப்ட் மஹிந்திரா நிறுவனத்தின் INGLO ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    தார்.இ எலெக்ட்ரிக் மாடலில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற வெளிப்புற டிசைன், இன்டீரியர் வழங்கப்படுகிறது. புதிய தார்.இ மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் வெளியீடு 2025 வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். புதிய தார்.இ மாடல் ஹூண்டாய், கியா, மாருதி சுசுகி, ஹோண்டா, எம்ஜி மற்றும் டாடா நிறுவன எலெக்ட்ரிக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    • ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடலிலும் 2.2 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் சற்றே நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    மஹந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N எஸ்யுவி மாடலின் பிக்கப் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிய பிக்கப் டர்க் மாடலுக்கான டீசரை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    எனினும், இந்த மாடல் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் தான் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. Z121 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் சற்றே நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. புதிய பிக்கப் டிரக் 3000mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. வழக்கமான மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2600mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

     

    நீண்ட வீல்பேஸ் கொண்டிருப்பதால் ஸ்கார்பியோ N மாடலில் அதிக சுமையை ஏற்ற முடியும். ஸ்கார்பியோ N பிக்கப் டிர்க்-இல் இரட்டை கேபின் வெர்ஷனும் அறிமுகமாக இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. இந்த மாடலில் முற்றிலும் புதிய எல்இடி டெயில்லேம்ப், முன்புற கிரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த அம்சங்கள் அனைத்தும் ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடல் ஆடம்பர மாடல்கள் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடலிலும் 2.2 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட, நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172.5 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • மஹந்திரா XUV500 மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
    • ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV500 மாடலை 2011 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மஹிந்திரா உருவாக்கிய முதல் மோனோக் எஸ்யுவி மாடல் இது ஆகும். இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு மாற்றாக மஹிந்திரா XUV700 மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் XUV500 பிரான்டிங் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும், இதன் அடுத்த தலைமுறை மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

     

    அதிக பிரபலமாக இருந்த காரணத்தால், XUV500 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் இணையத்தில் வெளியானது. S301 குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    மேலும் இந்த காரின் ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. டாடா நிறுவனமும் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக புதிய கர்வ் மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    இதனிடையே புதிய மஹிந்திரா XUV500 கூப் எஸ்யுவி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் புதிய கார் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதே போன்ற டிசைன் XUV ஏரோ கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இதன் டிசைன் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Photo Courtesy: DANGER B via Gaadiwaadi

    • இந்த எலெக்ட்ரிக் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் கடந்த ஆகஸ்ட் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • இந்த காரில் 80 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான XUV700 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய காரின் டிசைன் காப்புரிமை சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் மஹிந்திரா XUV e8 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

    தோற்றத்தில் இந்த கார் அதன் ஐசி என்ஜின் கொண்ட மாடலை போன்றே காட்சியளிக்கிறது. டிசைனிங்கும் மஹிந்திரா XUV e8 மாடல், XUV700-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது. காரின் முகப்பு பகுதியில் எல்இடி லைட் பார், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள் உள்ளன.

     

    கோப்புப் படம் 
    கோப்புப் படம் 

    இத்துடன் பக்கவாட்டு பகுதியில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த காரில் ஏரோடைனமிக் டிசைன் செய்யப்பட்ட வீல் கவர்கள், பிலஷ் டோர் ஹேன்டில்கள் வழங்கப்படுகின்றன. இவை இந்த காரின் ரேன்ஜ்-ஐ சற்று அதிகப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த காரில் 80 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பேட்டரியுடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் 230 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் எவ்வளவு கிலோமீட்டர்கள் செல்லும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • மஹிந்திரா மராசோ மாடலின் பேஸ் M2 வேரியண்ட்-க்கு ரூ. 58 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிப்பு.
    • மஹிந்திரா XUV300 மாடலின் T-GDI வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவன டீலர்ஷிப்கள் சார்பில் மஹிந்திரா கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் தார் 4x4, பொலிரோ, பொலிரோ நியோ, மராசோ மற்றும் XUV300 மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்த கார் மாடல்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இந்த பலன்கள் கேஷ் தள்ளுபடி, இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் மஹிந்திரா தார் RWD, XUV700, ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV400 மற்றும் பொலிரோ, XUV300 கார்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

     

    மஹிந்திரா மராசோ மாடலின் பேஸ் M2 வேரியண்ட் ரூ. 58 ஆயிரமும், மிட் ஸ்பெக் M4 பிளஸ் வேரியண்டிற்கு ரூ. 36 ஆயிரமும், டாப் எண்ட் M6 பிளஸ் வேரியண்டிற்கு ரூ. 73 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 123 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ மாடலின் பி4 வேரியண்டிற்கு ரூ. 37 ஆயிரம் தள்ளுபடி, பி6 மற்றும் பி6 ஆப்ஷனல் ட்ரிம்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பொலிரோ மாடலில் 75 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     

    மஹிந்திரா XUV300 மாடலின் T-GDI வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 52 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 55 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் 100 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மஹிந்திரா தார் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • மஹிந்திரா XUV700 மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த காரின் முதல் 50 ஆயிரம் யூனிட்கள் 12 மாதங்களில் வினியோகம் செய்யப்பட்டது.

    மஹிந்திரா நிறுவனம் ஒரு லட்சம் XUV700 யூனிட்களை 20 மாதங்களில் வினியோகம் செய்து இருக்கிறது. இதில் முதல் 50 ஆயிரம் யூனிட்கள் அறிமுகமான 12 மாதங்களில் எட்டியது. அதன்படி கடைசி 50 ஆயிரம் யூனிட்கள் வெறும் எட்டு மாதங்களில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா தனது XUV700 மாடலை ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, XUV700 மாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

    சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மஹிந்திரா நிறுவனம் 78 ஆயிரம் யூனிட்களுக்கு முன்பதிவு பெற்று, வினியோகம் செய்ய காத்திருப்பதாக தெரிவித்து இருந்தது. தற்போது இந்த மாடலின் உற்பத்தியை மாதம் 8 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது.

    மஹிந்திரா XUV700 மாடல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என்று இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கிறது. இவை முறையே 200 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 185 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV700 மாடலின் 3-ரோ வெர்ஷன் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதே காரின் 2-ரோ வெர்ஷன் டாடா ஹேரியர், எம்ஜி ஹெக்டார், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மஹிந்திரா ஸ்கார்பியோ N முதலாம் ஆண்டு நிறைவு சமீபத்தில் கடந்தது.
    • ஸ்கார்பியோ சீரிசின் 1.17 லட்சம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளன.

    மஹந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 2002-ம் ஆண்டு தனது ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 11 ஆண்டுகளில் ஸ்கார்பியோ நிறுவனம் உற்பத்தியில் 9 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஸ்கார்பியோ சீரிசில் தற்போது ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் மேம்பட்ட பழைய தலைமுறை எஸ்யுவி ஆகும். இதன் விலை ரூ. 13 லட்சம் என்று துவங்குகிறது. ஸ்கார்பியோ N முற்றிலும் புதிய மாடல் ஆகும். இதன் விலை ரூ. 13 லட்சத்து 05 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N மாடல்களின் 1 லட்சத்து 17 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு, வினியோகத்துக்கு காத்திருக்கின்றன. இரு மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 65 வாரங்களில் இருந்து சமீபத்தில் தான் 55 வாரங்களாக சரிந்தது.

    மேலும் இந்தியாவில் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N அறிமுகமாகி முதலாம் ஆண்டு விழாவை மஹிந்திரா கடந்தது குறிப்பிடத்தக்கது.

    • மஹிந்திரா XUV.e8 மாடலின் முன்புற, பின்புறம் மாற்றப்பட்டு புதிய டிசைன் வழங்கப்படலாம்.
    • இந்த காரிலும் லெவல் 2 பிளஸ் தானியங்கி முறை, OTA அப்டேட்கள், 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய XUV700 எலெக்ட்ரிக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. XUV700 எலெக்ட்ரிக் வேரியண்ட், XUV.e8 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கார் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பை படங்களில் உள்ள மஹிந்திரா XUV.e8 மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய கான்செப்ட் வெர்ஷனின் படி, புதிய XUV.e8 மாடல் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனில் உள்ளதை போன்ற வெளிப்புற தோற்றம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய மஹிந்திரா XUV.e8 மாடலின் முன்புறம் மற்றும் பின்புறம் மாற்றப்பட்டு புதிய டிசைன் மற்றும் லைட்டிங் வழங்கப்படும் என்று தெரிகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய INGLO பிளாட்ஃபார்மில் XUV.e8 மாடல் உருவாக்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எஸ்யுவிக்களில் முதல் மாடலாக புதிய XUV.e8 மாடல் இருக்கும் என்று தெரிகிறது.

    இதே பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற மாடல்களை போன்றே, இந்த காரிலும் லெவல் 2 பிளஸ் தானியங்கி முறை, OTA அப்டேட்கள், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய மஹிந்திரா XUV.e8 மாடலின் பேட்டரி மற்றும் செயல்திறன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது.

    எனினும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் 60-80 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் 335-389 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் 7 சீட்டர் எலெக்ட்ரிக் மாடல் அளவீடுகளில் 4740mm நீளமும், 1900mm அகலம், 1760mm உயரம், 2762mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: Rushlane

    • டெஸ்டிங் செய்யப்படும் மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.
    • மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தகவல்.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிஃப்ட் மாடலினை டெஸ்டிங் செய்ய துவங்கி இருக்கிறது. புதிய XUV300 பேஸ்லிஃப்ட் மாடல் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டெஸ்டிங் செய்யப்படும் மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் மேம்பட்ட டிசைன் வழங்கப்படுகிறது. இதே போன்று காரின் உள்புறமும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் புதிய மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.

    மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்பகட்ட டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த மாலில் தற்காலிக ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் பொருத்தப்பட்டு உள்ளன. புதிய XUV300 பேஸ்லிஃப்ட் மாடலில் XUV700 தழுவிய C-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. தோற்றத்தில் இவை XUV.e போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    இதன் மூலம் காரின் முன்புறம் முற்றிலும் புதிய தோற்றம் பெறும். இதில் இரண்டு பாகங்களில் கிரில், நடுவில் பெரிய ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது. புதிய XUV300 பேஸ்லிஃப்ட் மாடலில் முற்றிலும் புதிய டெயில்கேட், பம்ப்பர், டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • மஹிந்திரா BE.05 மாடல் 4300mm நீளம், 2775mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே XUV400 மாடலை அறிமுகம் செய்த மஹிந்திரா தற்போது பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல்களில் எலெக்ட்ரிக் வசதியை வழங்க முடிவு செய்து இருக்கிறது.

    இதற்காக மஹிந்திரா நிறுவனம் BE (Bron Electric) பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மஹிந்திராவின் BE துணை பிராண்டின் முதல் மாடலாக BE.05 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் இந்த கார் முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த வரிசையில், மஹிந்திரா BE.05 மாடல் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அளவீடுகளை பொருத்தவரை மஹிந்திரா BE.05 மாடல் 4300mm நீளம், 2775mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய INGLO பிளாட்ஃபார்மில், லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தை BE.05 மாடல் கொண்டிருக்கிறது. மஹிந்திரா BE.05 மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன் செட்டப், புதிய ஸ்டீரிங் வீல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

    Photo Courtesy: Rushlane

    • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலாக ஸ்கார்பியோ N மாடல் இருக்கிறது.
    • புதிய ஸ்கார்பியோ மாடலில் சோனி நிறுவனத்தின் 3D சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலின் இண்டீரியர் எப்படி இருக்கும் என்பதை புகைப்படங்களில் தெரியப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்கார்பியோ N மாடல் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய காரின் இண்டீரியர் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    அட்ரினோ X யூசர் இண்டர்பேஸ் உடன் இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்களை மஹிந்திரா வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஸ்கார்பியோ N மாடலில் சோனி நிறுவனத்தின் 3D சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூப், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.


    இதன் கேபினில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டூயல் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், MID யூனிட், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், குரூயிஸ் கண்ட்ரோல், பல்வேறு டிரைவ் மோட்கள், ஆறு ஏர்பேக், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள் மற்றும் ஏராளமான அம்சங்கள் உள்ளன.

    முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அளவில் 4662mm நீளம், 1917mm அகலம், 1870mm உயரம் மற்றும் 2750mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்த எஸ்.யு.வி. மாடல் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் மற்றும் 2.9 லிட்டர் எம் ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 4x4 வேரியண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான விலை விவரங்கள் ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

    ×