search icon
என் மலர்tooltip icon

    கார்

    தொடர் டெஸ்டிங்கில் மஹிந்திரா XUV700 எலெக்ட்ரிக்
    X

    தொடர் டெஸ்டிங்கில் மஹிந்திரா XUV700 எலெக்ட்ரிக்

    • மஹிந்திரா XUV.e8 மாடலின் முன்புற, பின்புறம் மாற்றப்பட்டு புதிய டிசைன் வழங்கப்படலாம்.
    • இந்த காரிலும் லெவல் 2 பிளஸ் தானியங்கி முறை, OTA அப்டேட்கள், 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய XUV700 எலெக்ட்ரிக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. XUV700 எலெக்ட்ரிக் வேரியண்ட், XUV.e8 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கார் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பை படங்களில் உள்ள மஹிந்திரா XUV.e8 மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய கான்செப்ட் வெர்ஷனின் படி, புதிய XUV.e8 மாடல் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனில் உள்ளதை போன்ற வெளிப்புற தோற்றம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய மஹிந்திரா XUV.e8 மாடலின் முன்புறம் மற்றும் பின்புறம் மாற்றப்பட்டு புதிய டிசைன் மற்றும் லைட்டிங் வழங்கப்படும் என்று தெரிகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய INGLO பிளாட்ஃபார்மில் XUV.e8 மாடல் உருவாக்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எஸ்யுவிக்களில் முதல் மாடலாக புதிய XUV.e8 மாடல் இருக்கும் என்று தெரிகிறது.

    இதே பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற மாடல்களை போன்றே, இந்த காரிலும் லெவல் 2 பிளஸ் தானியங்கி முறை, OTA அப்டேட்கள், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய மஹிந்திரா XUV.e8 மாடலின் பேட்டரி மற்றும் செயல்திறன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது.

    எனினும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் 60-80 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் 335-389 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் 7 சீட்டர் எலெக்ட்ரிக் மாடல் அளவீடுகளில் 4740mm நீளமும், 1900mm அகலம், 1760mm உயரம், 2762mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: Rushlane

    Next Story
    ×