என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் டெஸ்டிங்கை துவங்கிய மஹிந்திரா XUV500 கூப்  எஸ்யுவி
    X

    இந்தியாவில் டெஸ்டிங்கை துவங்கிய மஹிந்திரா XUV500 கூப் எஸ்யுவி

    • மஹந்திரா XUV500 மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
    • ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV500 மாடலை 2011 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மஹிந்திரா உருவாக்கிய முதல் மோனோக் எஸ்யுவி மாடல் இது ஆகும். இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு மாற்றாக மஹிந்திரா XUV700 மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் XUV500 பிரான்டிங் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும், இதன் அடுத்த தலைமுறை மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

    அதிக பிரபலமாக இருந்த காரணத்தால், XUV500 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் இணையத்தில் வெளியானது. S301 குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    மேலும் இந்த காரின் ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. டாடா நிறுவனமும் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக புதிய கர்வ் மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    இதனிடையே புதிய மஹிந்திரா XUV500 கூப் எஸ்யுவி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் புதிய கார் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதே போன்ற டிசைன் XUV ஏரோ கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இதன் டிசைன் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Photo Courtesy: DANGER B via Gaadiwaadi

    Next Story
    ×