search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்"

    • நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ கணபதி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கோபிநாத் என்பவர் பூசாரியாக உள்ளார்.நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் அருகே உள்ள ஆப்பிகோடு பகுதியில் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்தையொட்டி அரசு சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று ஒரு மர்ம கும்பல் அந்தக் கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளனர். இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதருனிஷா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன், லிஜின் உட்பட 10 பேர் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் கவுன்சிலர் வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    • நேற்று மாலை இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காட்டு பாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 40).10-வது வார்டு திமுக கவுன்சிலராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    நேற்று மாலை இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கனியாமூரிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் ஜீவா என்பவர் கே. பி. கே சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் 10 கிலோ சிக்கன் வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் ஜீவாவிடம் தன்னுடைய வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதாகவும் தங்கள் மோட்டார் சைக்கிளை கொடுங்கள் பெட்ரோல் வாங்கி வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    மர்ம நபர் கூறியதை நம்பி கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து ள்ளார். வண்டியை பெற்றுக் கொண்ட மர்ம நபர் பெட்ரோல் வாங்கி கொண்டு சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் ஜீவா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று செல்போனை தேடி பார்த்த போது செல்போ னையும் திருடி சென்றது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் சங்கீதாவிடம் நைசாக பேச்சுகொடுத்து கவனத்தை திசைதிருப்பினார்.
    • சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருப்பனந் தாழ்வார் தெருவை சேர்ந்த–வர் செங்குட்டுவன். அவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர் நேற்று இரவு சிதம்பரம் வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சங்கீதா–விடம் நைசாக பேச்சு–கொடுத்து கவனத்தை திசை–திருப்பினார். உடனே அந்த வாலிபர் சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கி–ருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சங்கீதா புகார் செய்தார். கை பையில் 2 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம், ஏலச்சீட்டுக்கு உரிய ரசீது–கள் இருந்ததாக தெரிவித்தார். போலீசார் வழக்கு––பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    • ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • நள்ளிரவு நேரத்தில் பீரோ வைக்கப்பட்டிருந்த வீட்டின் உள் அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். சம்பவத்தன்று இரவு வீட்டின் ஒரு அறையில் அவரும், அவரது மகனும் படுத்து தூங்கினர்.

    இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் பீரோ வைக்கப்பட்டிருந்த வீட்டின் உள் அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது. தனது மனைவி தான் அந்த அறையில் உறங்குவதாக ஆனந்தகுமார் நினைத்துள்ளார். காலையில் அந்த அறை கதவு திறக்கப்படாததால் எதிர் வீட்டில் வசிக்கும் தனது மகளை அழைத்து, அம்மா உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்என்று கூறினார்.

    அப்போது அவரது மகள், அம்மா எங்கள் வீட்டில் தான் இருக்கிறார், அங்கு எப்படி இருப்பார் என்று கேட்டுள்ளார். அந்த அறைக்கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஆனந்தகுமாரும், அவரது மகனும் பின்பக்கமாக சென்று பார்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது.

    யாரோ மர்மநபர்கள் ஆனந்தகுமாரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் ஜன்னலை உடைத்து புகுந்து உள்பக்கமாக கதவை தாழிட்டுக்கொண்டு பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம், வெள்ளி பொருட்கள், வைர நகையை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.

    மொத்தம் 40 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம் , ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆனந்தகுமார் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டினுள் ஆட்கள் இருக்குபோதே, ஆனந்தகுமாரின் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கும் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகங்கையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை டி. புதூரைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ராகவானந்தத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    ராகவனந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ராகவானந்தம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ராகவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடு புகுந்து வாலிபரை கொலை செய்தது ஏன் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×