search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாய நலக்கூடம்"

    • பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் கட்டடம் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது.
    • பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

    பல்லடம்  : 

    பல்லடம் வட்டாரத்தில் உள்ள சமுதாய நலக்கூடங்களை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளா் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து 2009-2014ம் ஆண்டுகளில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் ஏழை எளிய மக்களுக்காக நடுவேலம்பாளையம், 63.வேலம்பாளையம், காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம், வெங்கிட்டாபுரம், உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் சமுதாய நலக் கூடங்கள் கட்டி கொடுக்கப்பட்டன.

    இந்த கட்டடங்கள் செப்பனிடாமலும், வா்ணம் பூசாமலும் தற்போது சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் கட்டடம் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடங்களை சீரமைத்து, பழுது பாா்த்து, வா்ணம் பூசி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

    • கழிவுநீர் ஓடைகள் உடனடியாக சுத்தம் செய்யப்படும்.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்றுவதற்கு மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து நாகர் கோவில் மாநகரப் பகுதி யில் உள்ள வார்டுகளில் மோட்டார் சைக்கிளில் சென்றும் நடந்து சென் றும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். இன்று 52-வது வார் டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றும் நடந்து சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    தெங்கம்புதூரிலிருந்து தனது ஆய்வை தொடங்கி னார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீன் கடை யில் ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளிடம் சுகாதாரமான முறையில் மீன்களை வியாபாரம் செய்யவேண்டும் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

    பின்னர் அந்த பகுதியில் சாலை ஓரத்தில் இறைச்சி கடை ஒன்று இருந்தது. அந்த இறைச்சிக்கடை வியாபாரியிடம் முறையான அனுமதி பெற்று இறைச்சி களை விற்பனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து காடேற்றி உள்பட 52-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ள கழிவு நீரோடை, சாலைகளை ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்பு தூர் பகுதி பேரூராட்சியில் இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்க னவே இந்த பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணி களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகள் அனைத் தும் விரைவில் தொடங் கப்படும். இந்த பகுதியில் மாநக ராட்சிக்கு சொந்த மான சமுதாய நலக்கூடம் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. உடனடியாக அந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் ஓடைகள் உடனடியாக சுத்தம் செய்யப்படும்.

    சாலைகள் மோசமாக காணப்படுகிறது. அந்த சாலைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அந்த சாலை களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளும் சாலை ஓரங்களில் உள்ளது அந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. விரை வில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் பால சுப்பிரமணியன், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் அருகே உள்ள ஆப்பிகோடு பகுதியில் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்தையொட்டி அரசு சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று ஒரு மர்ம கும்பல் அந்தக் கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளனர். இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதருனிஷா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன், லிஜின் உட்பட 10 பேர் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ×