search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breaking"

    • உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது.

    இதனால் 20 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பாசனத்து க்கு பாதிப்பு ஏற்படலாம் என விவசாயிகள் அச்சமடை ந்துள்ளனர்.

    காவிரி ஆற்றிலி ருந்து மாயனூர் கதவ னையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர் திருச்சி வழியாக வாழவந்தான்கோட்டை ஏரிக்கு வந்ததும், அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் சுரக்குடிப்பட்டி ஏரி, தேவராயன் ஏரி, நவலூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பிஏரி, வெண்டியம்பட்டி ஏரி, வெட்டி ஏரி, காமத்து ஏரி, ஓடை ஏரி என 20 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம்.

    இந்த ஏரிகள் ஒன்று நிரம்பிய பி்ன் அடுத்து ஏரி நிரம்புவது வழக்கம்.

    இந்த ஏரிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பாசனம் செய்வதுவழக்கம்.

    இந்நிலையில் உய்யக்கொ ண்டான் நீட்டிப்பு வாய்க்கா லில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் காட்டுவாரி மூலம் சோளகம்பட்டி சைபன் வழியாக வெண்ணாறுக்கு செல்கிறது இதனால் மற்ற ஏரிகளுக்குதண்ணீர் செல்வது தடைப ட்டுள்ள தால், அப்பகுதி யில் விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறியதாவது:-

    வாழவந்தான்கோட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிலிருந்து சுமார் 20 ஏரிகளுக்கு சங்கிலித் தொடர் போன்று ஒவ்வொரு ஏரியாக நிரம்புவது வழக்கம்.

    தற்போது உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உடைந்ததால், தண்ணீர் அனைத்தும் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது.

    இந்த தண்ணீர் சோளகம்பட்டி சைபன் மூலம் வெண்ணாற்றில் கலக்கிறது.

    தற்போது தற்காலிகமாக மண் மூட்டைகளை வைத்து பொதுப்பணித்துறை பணியாளர்கள் அடைத்தாலும், தண்ணீர் வெளியேறுவதை தடுக்கு முடியாது.

    உடனடியாக போர்கால அடிப்படையில் தடுப்பணையை சீரமைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 38). இவருக்கு திவ்யபாரதி (35) என்ற மனைவியும்,லோகேஷ், விஷ்ணு என்ற 2 மகன்களும் உள்ளனர். ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது பாறைக்குள் வெடிமருந்தை திணித்து பாறைகளை வெடிக்க வைத்தபோது அதிலிருந்து சிதறிய கற்கள் ரோஷனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ரோஷன் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (வயது 63). அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் வெளியூரில் உள்ளதால் அடி க்கடி வீட்டை பூட்டி விட்டு ஆறுமுகம் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து ஆறுமு கத்தின் உறவினர் அந்த வழியாக வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. ஆனால் அங்கு பணம் மற்றும் நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே வையாபுரி விளக்கு ரோட்டில் வசித்து வருபவர் லட்சுமணன் மனைவி மல்லிகா(வயது 53) . இவர்அரசமலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார். அப்போது மூத்த மருமகள் நித்தியகல்யாணி என்பவர் மல்லிகாவிடம் சாவியை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிரச்சிஅடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 7பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ5ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து புகாரின் பேரில் காரையூர் போலீசார் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் 3 உண்டியல்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை‌ கோம்பை அடிவாரத்தில் முத்து மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் ஆகிய 2 கோவில்கள் உள்ளன. சித்திரை மாதத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி கிடாவெட்டி வழிபடுவது வழக்கம். இதேபோல் ஆடி 18 அன்று முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டு வருகின்றனர்.

    முத்து மாரியம்மன் கோவிலில் 1 உண்டியல் மற்றும் முனியப்பன் கோவிலில் 2 உண்டியல்கள் உள்ளன. நேற்று இங்கு பூஜை முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் 3 உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    3 உண்டியல்களிலும் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்திருக்கும் என தெரிகிறது. காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் 3 உண்டியல்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    • சிவகங்கையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை டி. புதூரைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ராகவானந்தத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    ராகவனந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ராகவானந்தம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ராகவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடு புகுந்து வாலிபரை கொலை செய்தது ஏன் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 4 கிராம் தங்க சங்கிலி திருட்டு.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (36). இவர் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    விமல் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை விமல் வந்து பார்த்த போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து  கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை புதிய கடற்கரையில் உள்ள பூங்காவில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பியார்நகர் மீனவ கிராமம் அருகே புதிய கடற்கரை உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் உள்ளன. இது நாகை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.

    இந்த கடற்கரை நகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த கடற்கரை பெரும் சேதமடைந்தது. சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் பேரலையில் இழுத்து செல்லப்பட்டன.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் பங்களிப்புடன் மீண்டும் கடற்கரையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

    இதையடுத்து நாகை புதிய கடற்கரைக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், காலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அமருவதற்காக கருங்கற்களாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டது. கோடைவிழாவை முன்னிட்டு புதிய கடற்கரையில் உள்ள பூங்கா உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சியளித்தன.

    இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்த நிலையில் விழா முடிந்த மறுநாள் இரவில் மர்ம நபர்கள் சிலர் புதிய கடற்கரை பூங்காவில் உள்ள அனைத்து இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றபோது இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், புதிய கடற்கரையில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் நாகை புதிய கடற்கரையில் சுழற்சி முறையில் போலீசார் நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×