search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing jewelry"

    • நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே படந்தால் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பம் (வயது42). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது தனது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் தங்கச் செயினை கழற்றி கல்லாப் பெட்டி அருகே வைத்திருந்தார்.

    அந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் கடையில் வெற்றிலை பாக்கு கேட்டு வந்தார். அதை எடுக்க உள்ளே சென்று திரும்பிய அவர் கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    எங்கு தேடியும் கிடைக்கா ததால் இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் நகையை திருடியது திருச்சி மாவட்டம் தொட்டி யம்பா ளையம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரசாந்த் (23) என்பவரை கைது செய்தனர்.

    • மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
    • தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    பெருமாள் கவுண்டர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இவர் மாதத்தில் ஒரு முறை தனது வீட்டுக்கு வந்து செல்வார்.

    பெரியம்மாள் மட்டும் தனியாக இருந்து கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது இரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். பின்னர் பெரியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் சத்தியமங்கலம் எஸ்.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் (26) என்றும் இவர் தான் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரையும் தேடி வருகிறார்கள்.

    • வியாபாரியிடம் விசாரணை
    • இதற்கிடையே நாராயணசாமியிடம் கடை வியாபாரத்துக்காக இளைய ராஜா ஒரு லட்சம் கடன் வாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி. டைலர் கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் நண்பராக பழகி வந்தார். இளைய ராஜா நெல்லித்தோப்பு செயின்ட் அந்துவான் வீதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே நாராயணசாமியிடம் கடை வியாபாரத்துக்காக இளைய ராஜா ஒரு லட்சம் கடன் வாங்கினார்.

    ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு நாராயணசாமியின் டைலர் கடைக்கு வந்த இளையராஜா அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த அரை பவுன் நகையை இளையராஜா திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நாராயணசாமி இளையராஜாவிடம் கேட்ட போது நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் அந்த நகையை வேறு பெயரில் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் நகை அடகு வைத்த ரசீதை நாராயணசாமியிடம் இளைய ராஜா கொடுத்தார். அதன் பிறகு இளையராஜா தலைமறைவாகிவிட்டார்.

    இது பற்றி இளையராஜாவின் மனைவி தேவியிடம் நாராயணசாமி கேட்ட போது அவர் அடவாடியாக பேசினார். இதையடுத்து நாராயணசாமி தன்னிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி விட்டு நகையை திருடி வேறு பெயரில் அடகு வைத்து மோசடி செய்த இளையராஜா மீது உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் மதிவாணன் (62).சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயிலுக்கு சென்றவர் வீட்டில் நகைகளை திருடி ஆடம்பரமாக செலவு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது

    மதுரை 

    மதுரை கோரிப்பாளை யம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (வயது 83). இவர் மதுரா கோட்ஸ் நிறு வனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தோணி ஒரு கொலை வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். வீடு திரும்பிய அந்தோணி கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷ னர் ஜெகன்நாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36), கணேசன் (46), செல்வகுமார் (33)ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் கைதான விஜயகுமார் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.

    நகையை கொள்ளை யடித்த 3 பேரும் தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.24 லட்சம் வாங்கி உள்ள னர். அந்த பணத்தை 3 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • தங்கச்சங்கிலி மற்றும் மோதிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், வாய்ப்பாடி ரோட்டில் எஸ்.எம்.ஏ. தோட்டத்தில் குடியிருந்து வருபவர் ரத்தினசாமி (வயது 43).

    இவர் ஜே.சி.பி. எந்திரம் வைத்து எர்த் மூவர்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று சேர்வைக்காரன் பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டின் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

    பின்னர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது.

    அதில் வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரத்தை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.

    இதனையடுத்து ரத்தினசாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
    • விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.

    கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.

    இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், வானபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இன்று காலை மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8½ பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 4 கிராம் தங்க சங்கிலி திருட்டு.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (36). இவர் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    விமல் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை விமல் வந்து பார்த்த போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து  கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×