என் மலர்
நீங்கள் தேடியது "Youth arrested for"
- கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழி யாக சந்தேகப்படும்படியாக ஆம்னி கார் ஒன்று வந்தது.
காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும், ரேஷன் அரிசியை வடமாநிலத்த வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடத்தூர் போலீசார் சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
- அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டி பாளையம் அடுத்த சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்று வளைத்து பிடித்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவ ட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (41) என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் தங்கி அனுமதி யின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர்.
- வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.
பவானி:
பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவர் பவானி அருகில் உள்ள சேர்வ ராயன்பாளையம் பகுதியில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் மோட்டார் சைக்கி ளை அவரது தங்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார்.
பிறகு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர். அவர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீ சார் அவரை நிறுத்தி விசா ரணை நடத்தினர்.
இதில் அவர் முன்னுக்கு முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த வாலி பரை போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஈரோடு பி.பி. அக்ரகாரம் பூம்புகார் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பது தெரிய வந்தது.
மேலும் ஈரோடு தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் பவானி, சேர்வராயன் பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.
பவானி:
பவானி பழைய காவிரி ஆற்று பாலம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பிண்ணாக பதில் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருவாமணி என்கிற மணிகண்டன் (24) என்பதும், பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்திற்காக கருவாமணி என்கிற மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சம்பவத்தன்று கே.என்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு ந்தார்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது.
அதே போல் சதுமுகை பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் டி.ஜி.புதூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருடப்பட்டதாக பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஏளூர் வேட்டு வன் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (36) என்பதும், அவர் நவீன்குமார் மற்றும் கணேசன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.
- சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
- விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.
கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
- போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே ஊமரெட்டியூர் மாரியம்மன் கோவில் பின்புறம் வசிப்பவர் ரேவதி வயது (50).
இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு வராண்டாவில் சமையல் செய்து விட்டு கியாஸ் சிலிண்டரையும், அடுப்பையும் அப்படியே விட்டு விட்டு இரவு தூங்கச்சென்று விட்டார்.
பின்னர் காலை எழுந்து வெளியே சமையல் செய்வதற்காக வந்து பார்த்தபொழுது சிலிண்டரும், அடுப்பும் காணவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் ரேவதி புகார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலா என்பவர் கியாஸ் சிலிண்டரும், அடுப்பும் எனது வீட்டில் இருக்கிறது.
இதனை எனது வீட்டிற்கு அடிக்கடி வரும் ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் (21) என்பவர் இங்கு வைத்து விட்டு சென்றுள்ளார் என ரேவதியிடம் லைலா கூறியுள்ளார்.
உடனடியாக கோவிந்தனை லைலா தனது வீட்டுக்கு வரும்படி நைசாக பேசி வரவழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து லைலாவும், ரேவதியும் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
- இது தொடர்பாக பூபதி என்கிற பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அப்போது 2 பேரும் திடீரென்று வியாபாரி ரகுவிடம் வாய்த்தகராறு செய்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது ரகுவின் கழுத்தில் இருந்த 6 அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
இதையடுத்து பின்னால் மற்றொரு வாகனத்தில் ரகு துரத்தி சென்றதையடுத்து மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
இது தொடர்பாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரோடு பழைய கரூர் ரோடு, கோணவாய்க்கால், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
- கவியரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது புளியம்பட்டி-மேட்டுப்பாளையம் ரோடு ஜே.ஜே.நகர் அருகே மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை 18 பாக்கெட்டுகள் மற்றும் விமல் பான் மசாலா 9 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கவியரசன்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- காரில் இருந்தவர்கள் காரை வேகமாக திருப்ப முயன்றனர்.
- 48 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பெருந்துறை-கோவை சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று போலீசாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை வேகமாக திருப்ப முயன்றனர். இதைப்பார்த்த போலீ சார் அந்த காரினை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
காரில் சீனாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 48 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ்கு மாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 48 மதுபாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்தனர். மேலும் சுரேஷ்கு மாரை நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் மலைய ம்பாளையம் வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதேபகுதியை சேர்ந்த சுந்தரம் (76) என்பவரை போலீசார் கைது செய்து 5 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.
கோபி சுண்டக்காம்பாளையம் எல்.பி.பீ. வாய்க்கால் கரை பகுதியில் மது விற்றதாக நம்பியூர் ஏலத்தூரை சேர்ந்த ரமேஷ்குமார் (37) என்பவரை போலீசார் கைது செய்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:
திருப்பூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி யில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது கம்பெனியில் ஆனந்த் என்பவர் டிரை வராக பணியாற்றி வரு கிறார். இவர் கம்பெனிக்கு தேவையான துணிகளை கொண்டு வருவதற்காக செங்கப்பள்ளிக்கு சரக்கு வாகனத்தில் சென்றார்.
தொடர்ந்து அவர் அங்கு துணிகளை ஏற்றிகொண்டு வந்தார். இதையடுத்து அவர் பெருந்துறை அடுத்த சிப்காட் அருகே ரோட்டோரம் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அவர் அங்கு சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பார்த்தார்.
அப்போது அங்கு நிறுத்தி இருந்த சரக்கு வாகனம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் (34) என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் புன்னியராஞ்யை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனத்தை மீட்டனர். மேலும் அவர்மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த னர்.
- மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
- தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
பெருமாள் கவுண்டர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இவர் மாதத்தில் ஒரு முறை தனது வீட்டுக்கு வந்து செல்வார்.
பெரியம்மாள் மட்டும் தனியாக இருந்து கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது இரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். பின்னர் பெரியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் சத்தியமங்கலம் எஸ்.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் (26) என்றும் இவர் தான் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரையும் தேடி வருகிறார்கள்.






