என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயின் பறித்த"

    • நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
    • இது தொடர்பாக பூபதி என்கிற பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அப்போது 2 பேரும் திடீரென்று வியாபாரி ரகுவிடம் வாய்த்தகராறு செய்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகுவின் கழுத்தில் இருந்த 6 அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.

    இதையடுத்து பின்னால் மற்றொரு வாகனத்தில் ரகு துரத்தி சென்றதையடுத்து மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

    இது தொடர்பாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரோடு பழைய கரூர் ரோடு, கோணவாய்க்கால், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×