சரக்கு வாகனத்தை திருடிய வாலிபர் கைது

குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான புன்னியராஞ்.
கைதான புன்னியராஞ்.
Published on

பெருந்துறை:

திருப்பூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி யில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது கம்பெனியில் ஆனந்த் என்பவர் டிரை வராக பணியாற்றி வரு கிறார். இவர் கம்பெனிக்கு தேவையான துணிகளை கொண்டு வருவதற்காக செங்கப்பள்ளிக்கு சரக்கு வாகனத்தில் சென்றார்.

தொடர்ந்து அவர் அங்கு துணிகளை ஏற்றிகொண்டு வந்தார். இதையடுத்து அவர் பெருந்துறை அடுத்த சிப்காட் அருகே ரோட்டோரம் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அவர் அங்கு சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பார்த்தார்.

அப்போது அங்கு நிறுத்தி இருந்த சரக்கு வாகனம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் (34) என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் புன்னியராஞ்யை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனத்தை மீட்டனர். மேலும் அவர்மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com