நகை திருடிய வாலிபர் கைது

நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நகை திருடிய வாலிபர் கைது
Published on

சாத்தூர்

சாத்தூர் அருகே படந்தால் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பம் (வயது42). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது தனது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் தங்கச் செயினை கழற்றி கல்லாப் பெட்டி அருகே வைத்திருந்தார்.

அந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் கடையில் வெற்றிலை பாக்கு கேட்டு வந்தார். அதை எடுக்க உள்ளே சென்று திரும்பிய அவர் கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

எங்கு தேடியும் கிடைக்கா ததால் இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் நகையை திருடியது திருச்சி மாவட்டம் தொட்டி யம்பா ளையம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரசாந்த் (23) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com