சேலம் கந்தாஸ்ரமம் அருகே பாறைக்கு வைத்த வெடியில் சிக்கிய தொழிலாளி சாவு

ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கந்தாஸ்ரமம் அருகே  பாறைக்கு வைத்த வெடியில் சிக்கிய தொழிலாளி சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 38). இவருக்கு திவ்யபாரதி (35) என்ற மனைவியும்,லோகேஷ், விஷ்ணு என்ற 2 மகன்களும் உள்ளனர். ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பாறைக்குள் வெடிமருந்தை திணித்து பாறைகளை வெடிக்க வைத்தபோது அதிலிருந்து சிதறிய கற்கள் ரோஷனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ரோஷன் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com