search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம சாவு"

    • காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23) இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
    • அரசூர் பாரதி நகர் அருகே உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23) இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 28-ந்தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் பாரதி நகர் அருகே உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் செல்லதுரையின் செல்போனுக்கு கடைசியாக. பேசியது திருநாவலூர் அருகே உள்ள கோபாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மனைவி ஷர்மிளா (23) என தெரிய வந்தது. ஷர்மிளாவிற்கு திருமணம் ஆவதற்கு முன்பு செல்லதுரை காதலித்து வந்துள்ளார். அப்போது ஷர்மிளாவை ஆபாசமாக விடியோ எடுத்த செல்லதுரை, அதை வைத்து மிரட்டி ஷர்மிளாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் செல்லதுரையின் தொல்லை தாங்காமல் தனது கணவர் வீடான கோபாலகிருஷ்ணபுரம் சென்று விட்டார்.  சம்பவத்தன்று சர்மிளா வீட்டிற்கு சென்ற செல்லதுரை, அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

    இதில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திர மடைந்த ஷர்மிளா, தான் தூக்கு போட்டுக்கொண்டு சாகப்போவதாக அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதில் பயந்து போன செல்லதுரை பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து புடவையை அறுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்லதுரையின் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளா தனது நண்பர்கள் 3 பேரிடம் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். சென்னையிலிருந்து வந்த 3 ஆண் நண்பர்களும், செல்லதுரையின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் போட்டு விட்டு சென்றனர்   இதையடுத்து செல்லதுரை இறந்ததை போலீசாரிடம் சொல்லாமல் மறைத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஷர்மிளாவை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரம் அருகே உள்ள கீழ் முத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரத் (22), ராஜ்குமார் (22), சென்னையைச் சேர்ந்த ஆனந்த் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாள தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றின் கரையில் உள்ள குட்டையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சென்று, தீயணைப்பு துறையினர் உதவியுடன் தண்ணீரில் மிதந்த ஆண் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.

    வாலிபரின் முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து இருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அதனை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    வாலிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி நகரத்தை ஒட்டியுள்ள உதயேந்திரம், மேட்டுப்பாளையம், சி.வி.பட்டறை மற்றும் அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    மணல் கொள்ளை நடத்தும் மாபியா கும்பலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவாய்த்துறையினரை தாக்கியும், மணல் கடத்தல் தொடர்பாக தகவல் அளிப்பவர்கள் தாக்கப்பட்டு வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் களும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் மணல் கொள்ளையர்கள் பல்வேறு கோஷ்டிகளாக உள்ளதால், அவர்களுக்கிடையே ஏற்படும் தகராறு தொடர்பாக போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தும் போலீசார் வேறு வழக்குகளை பதிவு செய்து முடித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதால், இது இருதரப்புகளுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தூர் அருகே பட்டாசு வேலைக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபாண்டி (வயது 33).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார்.

    அப்போது எந்திரத்தில் சிக்கிய விபத்தில் இவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிந்தப்புலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்து அவர் வெற்றிலையூரணியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜ பாண்டி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென் றார். ஆனால் அவர் பட்டாசு ஆலைக்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜபாண்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இந்த நிலையில் சிந்தப்புலி -மேட்டமலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது 2 கால்களும் மடங்கிய நிலையில் இருந்தன. சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவஇடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு மாணிக்கம் விநாயகர் கோவில் தெருவில் இன்று அதிகாலை வடமாநில வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வட மாநில வாலிபர் யார்? எதற்காக காட்பாடி வந்திருந்தார் என்பது தெரியவில்லை. அவர் யார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து கிடந்த வட மாநில வாலிபர் நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும் அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மறுவாழ்வு இல்லம் அருகே பிணம் மீட்பு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள மல்லவாடி சொரந்தை மறுவாழ்வு இல்லம் அருகில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிணமாக கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரிகா (வயது 19) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

    இந்த நிலையில் திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சந்திரிகா சென்றார். அங்கு சந்திரிகா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார்.

    சந்திரிகா இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சந்திரிகா இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விரைந்து வந்த போலீசார் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரிகா இறந்த தகவல் அறிந்த 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சந்திரிகாவின் உறவினர்களை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

    சந்திரிகாவின் சாவிற்கு நீங்கள் தான் காரணம் உங்கள் வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் என சரமாரியாக கேள்வி கேட்டு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குரிசிலாப்பட்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றினர்.

    தருமபுரி,

    தருமபுரி மா வட்டம், இண்டூர் அருகே உள்ள பச்சையம்மன் கோவில் கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 25).

    நவீன் குமாருக்கு இதய நோய் இருந்ததால் சமீபத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நவீன்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து நவீன் குமார் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.

    இந்நிலையில் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக நேற்று கிருஷ்ணன் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஓச்சேரி அருகே நடந்தது
    • கொலையா? விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த ஒச்சேரியில் உள்ள மக்லின் கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று மிதந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு அடைந்தனர். பின்னர் ஒச்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிதந்து கிடந்த பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதிய தெரு பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இவரது மனைவி கவிதா ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம், ஜன.3

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாங்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் விஸ்வநாதன் (வயது 36).

    இவர் தக்காளி மார்க்கெட்டில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி கவிதா ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தில் உள்ள விஸ்வநாதனின் நண்பரான பெரியண்ணன்(33) என்பவரது வீட்டிற்குச் சென்ற விஸ்வநாதன் அங்கு மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டிக்கொண்டார்.

    அந்த வீட்டிலிருந்த குழந்தைகள் தகவல் தெரிவித்ததன் பேரில் விஸ்வநாதனை ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நண்பர் வீட்டில் வேன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்
    • நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கே.டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மகள் காவியா (வயது 13). இவரது தாயார் வரலட்சுமி இறந்து விட்டார். எனவே காவியா தனது அத்தை ஊரான விழுப்புரம் அருகே குன்னம் கிராமத்தில் தங்கி 7-ம் வகுப்பு வரை படித்து வந்தார். இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பிரபு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த காவியா தூக்கில் பிணமாக தொங்கினார். நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே ஜன்னல் வழியே எட்டிபார்த்தபோது காவியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகு மார் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். காவியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரபுவிடம் விசாரித்தபோது தனது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவி த்தார். ஆனால் காவியா வின் தலையில் காயம் உள்ளது. எனவே இந்த சாவு குறித்து போலீசார் சந்தேகிக்கி றார்கள். பிரேத பரிசேதனை முடிவில் காவியா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

    • சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
    • போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், எப்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ஹிட்டாச்சி வண்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி.

    இந்நிலையில் ராஜேஷ் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த புத்தி கட்டையில் உள்ள வெங்கடாசலபதி என்பவர் நிலத்தை குத்தகைக்கு ஒட்டி வரும் பூமியை சமப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

    இது குறித்து அவரது மனைவி ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது ராஜேஷின் வலது கையில் காயமும், மணிக்கட்டு பகுதியில் காயமும், கழுத்து கீழ்ப்பகுதியில் காயமும் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அவர் தாளவாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதா கவும், விசாரித்து நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • தனது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.
    • சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள தொட்லாம்பட்டியை சேர்ந்தவர் குமார்.

    இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

    குமாரின் மனைவி குமாரசாமிபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தைக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இறந்தது பெண் குழந்தை என்பதால் இந்த திடீர் மரணம் குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×