search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்றம்"

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
    • மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருக செல்வராசன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணைச் செயலாளர் ஜெயவேலு நன்றி கூறினார்.

    பாடச்சுமை

    கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் நன்கு பயிலும் வகையில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 பருவத் தேர்வுகளை மட்டும் பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே வினாத்தாள் வடிவமைத்து தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இணைய வழி வாராந்திர மற்றும் பருவத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு இனைய வழி பணிகளை பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடு வித்துவிட்டு கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரண நிலை இடையிலே ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் அதே சதவிகிதத்தில் அகவிலைப்படி உயர்வுகள் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கரூரில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
    • இதற்காக கரூர் மாவட்டத்தில் 15 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 58 மேல்நிலைப்பள்ளிகள், 56 உயர்நிலைப்பள்ளிகள், 165 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில், மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் விதமாக, வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் சுமார் 26,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு முதல்கட்டமாக கருர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3 கோடியே 34 லட்சத்து 800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக கரூர் மாவட்டத்தில் 15 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வானவில் மன்ற செயல்பாடுகள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் அறி வியல் மனப்பான்மையுடனும் ஆர்வத்துடன் செயல்பாடுகளில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநிலஅளவில் நடைபெற்ற மன்றப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மன்றப் பொருளாளர் ராம.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கோ.முருகன், அனைத்து வியாபரிகள் சங்கத் தலைவர் சேகர், செயலர் குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார்கள்.

    அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலையில் முழு அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். ரோட்டரி முன்னாள் தலைவர் ஆறுமுகம், பிரகாசம் சன்மார்க்க இளைஞர் அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திர சேகரன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

    • குமாரபாளையம் காவல்துறை சார்பாக சிறுவர்கள் மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பட பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
    • இதையொட்டி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்துறை சார்பாக சிறுவர்கள் மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பட பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சார்ந்த லோகநாதன், மற்றும் விடியல் பிரகாஷ், ராணி, தனலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×