வள்ளலார் மன்றத்தில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.
வள்ளலார் மன்றத்தில்  தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மன்றப் பொருளாளர் ராம.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கோ.முருகன், அனைத்து வியாபரிகள் சங்கத் தலைவர் சேகர், செயலர் குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார்கள்.

அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலையில் முழு அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். ரோட்டரி முன்னாள் தலைவர் ஆறுமுகம், பிரகாசம் சன்மார்க்க இளைஞர் அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திர சேகரன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com