search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கடை"

    • சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் சாலையில் நடந்து வந்தனர்.
    • வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிரா மத்தைச் சேர்ந்த வர்கள் சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் மடப்பட்டு நோக்கி சாலையில் நடந்து வந்தனர். அப்போது திருக்கோவிலூ ரிலிருந்து மடப்பட்டு நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அமல்தாஸ் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பொதுமக்கள் புகார்
    • பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை என புகார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே பள்ளி மருத்துவமனை அருகே உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு புகார் அளித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் அடுத்த மிட்டூர் பகுதியில் மதுபான கடை உள்ளது.

    இந்த கடையின் வழியாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலைக்கு செல்வதுடன் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களும் பெண்களும் நடந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வழியாக வரும்போது சாலை ஓரமே உள்ள இந்த மதுபான கடையினால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது.

    இந்த கடையின் ஒட்டிய பகுதியிலேயே அனுமதி இன்றி பார் நடைபெற்று வருகிறது. எனவே இந்த மதுபான கடையை உடனடியாக வேரு இடத்திற்கு மாற்ற வேண்டும் ஏன்னா பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுநாள் வரையில் மாற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல் அனுமதியின்றி நடைபெறும் பார் யை மூட தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை.
    • சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை.

    வீரபாண்டி:

    திருப்பூர் குன்னாங்கல்பாளையம் பாரதிதாசன் நகர் ,அம்மன் நகர் பொதுமக்கள் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: - எங்கள் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். திருப்பூரிலிருந்து டிகேடி. மில் வழியாக செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் . பாரதிநகர் ,கெம்பே நகர் இடையே உள்ள பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க சிலர் முயன்று வருவதாக தகவல் வருகிறது. கெம்பே நகர் அருகில் தேவாலயமும் தனியார் பள்ளியும் உள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    பொதுமக்கள் அந்த சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் . மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே மதுபான கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த கல்லூரி 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 3500 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • இந்த கோவில் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 3500 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் உள்ளன.

    இந்த கல்லூரியின் அருகே அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் வடசென்னிமலை பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவில் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

    இந்த மதுபான கடையை அகற்றக்கோரி கல்லூரி முதல்வர் சித்ரா மாவட்ட கலெக்டரிடம் 2 முறை புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கல்லூரிக்கு அருகாமையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு வரும்போதும், செல்லும் போதும் மது அருந்திவிட்டு வருகிறார்கள். சில மாணவர்களின் இந்த ஒழுங்கீனத்தால் பல மாணவர்கள் கெட்டுப் போகிறார்கள்.

    இதனால் அடிக்கடி கல்லூரி மாணவர்களுடைய சமூகப் பிரச்சினை எழுந்து வருகிறது. மேலும் பஸ் நிலையத்தில் இருந்து மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் நடந்து கல்லூரிக்கு வருகின்றனர். அப்போது மாணவிகளை அந்த பகுதியில் மது அருந்திவிட்டு வருபவர்கள் கிண்டல், கேலி செய்கிறார்கள்.எனவே கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேருந்து இயக்கி தர வேண்டும் என அந்த புகார் மனுவில்அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகஅவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    எங்கள் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையினால் மாணவர்களின் நலன் பெரும் பாதிக்கப்படுகிறது. அதனால் இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் பஸ் நிலையத்திலிருந்து மாணவ மாணவிகள் நீண்ட தூரம் நடந்து கல்லூரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நடந்துவரும் பெண்களிடமும் மது அருந்தியவர்கள் கிண்டல் கேலி செய்து அதிக பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். எனவே அரசு இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுபான கடையை தடை செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கீழ்குளம் அருகே வில்லாரிவிளையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் தொடங்க முற்படும் மதுபான கடையை தடை செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வக்கீல் பால்மணி தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா சார்பில் அனில்குமார், அ.தி.மு.க. சார்பில் வின்சன்ட், கம்யூனிஸ்ட் சார்பில் வக்கீல் ஸ்டான்லி, நாம் தமிழர் ஜெனிஸ், தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வில்லாரி விளை பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், பெண்கள் குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
    • 150 பேர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே கீழ்குளம் வில்லாரி விளை சந்திப்பு பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை அமைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீர் என ஒரு கடையில் மதுபான பொருட்களை இறக்கியுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான பொருட்கள் இறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி பொருட் களை கடையில் இறக்கினர். இதையடுத்து சம்மந்தபட்ட 15-ம் வார்டு கவுன்சிலர் அனிதா தலைமையில், பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார் உட்பட பொதுமக்கள் திரண்டு இரவில் சாலை மறியல் செய்தனர்.

    போராட்டத்தில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் ஒன்றும் மற்றும் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் மதுபான கடையில் உள்ள பொருட்களை அகற்றி னால் மட்டுமே கலைந்து செல்வ தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து குளச்சல்.டி.எஸ்.பி. தங்கராமன் போராட்ட காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தனியார் மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்து வதாக கூறினார். ஆனால் பொதுமக்கள் அப்புறப்படுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இதில் பொது மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மனித உரிமை துறை பொறுப்பாளர் ராஜகிளன், பாரதிய ஜனதா கிள்ளியூர் வட்டார தலைவர் தன சிங், மாவட்ட செயலாளர் சுடர் சிங், கவுன்சிலர்கள் லாசர், எமில் ஜெபசிங் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேச்சு வார்த்தையில் மது பான கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக புதுக் கடை போலீசார் அனுமதி யின்றி மறியல் போராட் டம் நடத்தியதாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×