search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் சோதனை"

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
    • காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 2 நாட்களில் 16,107 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • போலீசில் சிக்கியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2 நாட்களாக நம்பர் பிளேட்களை சரியாக பொறுத்தாத வாகன ஓட்டிகள் மீதும் நம்பர் பிளேட்டுகளில் கட்சியின் சின்னங்கள் மற்றும் படங்களை வரைந்து இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி கடந்த 2 நாட்களில் 16,107 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசில் சிக்கிய அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
    • இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ெரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ெரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலும், ெரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எப்.) ஆய்வாளா் தலைமையிலான போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

    சேலம் வழியாக டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ெரயில்களிலும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் ெரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டா் மூலம் போலீசார் சோதனையிட்டு வருகின்றனா். இதுதவிர இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 27-ந்தேதி வரை தொடா்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • மாநகர போலீஸ் கமிஷனராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராஜேந்திரன், அன்றைய தினம் முதலே அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • கைதிகளின் அறைகள், உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட ஏராளமான அறைகளில் சோதனை செய்துனர்.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அடிக்கடி போலீசார் கைதிகளின் அறைகளில் சோதனை நடத்துவது வழக்கம். அதே நேரத்தில் கைதிகளால் செல்போன் பயன்படுத்தப்படுகிறதா? என்ற சோதனையும் அவ்வப்போது நடைபெறும்.

    இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராஜேந்திரன், அன்றைய தினம் முதலே அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதாவது மாநகர பகுதியில் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாநகர பகுதியில் சாகசம் நிகழ்த்தும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் பாளை மத்தியச்சிறையில் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரையடுத்து அங்கு சோதனைகள் மேற்கொள்ள கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று காலை அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் உதவி கமிஷனர் பிரதீப், 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 47 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கைதிகளின் அறைகள், உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட ஏராளமான அறைகளில் சோதனை செய்துனர்.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புழல் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
    • கைதிகள் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடந்தது.

    செங்குன்றம்:

    புழல் விசாரணை ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும் தண்டனை ஜெயிலில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும் மகளிர் ஜெயிலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சமீப காலமாக புழல் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதனை தடுக்கும் முறையில் இன்று அதிகாலை 6 மணிக்கு கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் தலைமையில் புழல் ஜெயில் டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ், புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் கைதிகள் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடந்தது. இந்த சோதனையில் செல்போன் கஞ்சா எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை தொடரும் என துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தார்.

    • 40 போலீசார் நேற்று விடிய விடிய ஒகேனக்கல்லில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு எப்போதுமே சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும்.

    இருப்பினும் இன்று புத்தாண்டு பிறப்பதை யொட்டி நேற்று வழக்கத்தை விட கூடுதல் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

    கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்தனர்.

    இதையடுத்து பென்னாகரம் போலீஸ் டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 40 போலீசார் நேற்று விடிய விடிய ஒகேனக்கல்லில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    புத்தாண்டு பிறப்பை யொட்டி எவ்விதமான அசம்பாவிதங்களும் நடந்து விட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • (டிசம்பர் 6) நாடு முழுவதும் முக்கிய இடங்களிலும், ரெயில்வே ஸ்டேஷன்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • இதனால், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி

    (டிசம்பர் 6) நாடு முழுவதும் முக்கிய இடங்களிலும், ரெயில்வே ஸ்டேஷன்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன்களில் ஆர்.பி.எப் போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்படி, சேலம் ரெயில் நிலையத்தில் ஆர்.பி.எப் போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டு வருகிறனர். ரெயில்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தப்பட்டது. நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    குள்ளனம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப்பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் உடைமைகள், நடைமேடை, கார் பார்க்கிங், பார்சல், ஆட்டோ ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.

    • 17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அவர் போதைக்கு அடிமையாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர். இதில் அந்த சிறுமியை கடந்த 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு சிறுமியை வாலிபர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் சிறுமியை அருகில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து அவர் மயக்கத்தில் இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளரும் சீரழித்துள்ளார்.

    மறுநாள் அங்கிருந்து தப்பி வந்த சிறுமியை இன்னொரு நபர், வேலை தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இப்படி திருச்சூர், வயநாடு, பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று 3 மாதங்கள் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீசார் அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    இதில் 13 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.
    • தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கார் வெடிப்பில் சிக்கி உயிரிழந்த முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என அறிவித்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின், மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழக காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடந்து வருகிறது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முபினை போன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளை கண்டுபிடித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் இன்று காலையில் 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை ஏழுகிணறு, சடையப்ப மேஸ்திரி தெரு, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால் பேட்டை சைவ முத்தையா தெரு மற்றும் வடக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு இடம் என பூக்கடை துணை கமிஷனர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    துணை கமிஷனர் ஆல்பர்ட்வின் தலைமையிலான போலீஸ் காலை 6 மணிக்கு இந்த சோதனையை தொடங்கினர். காலை 8 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

    இதே போன்று புளியந்தோப்பு துணை கமிஷனரின் எல்லைக்குட்பட்ட பகுதியான கொடுங்கையூர் வள்ளுவர் தெருவிலும் சோதனை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 43 இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் வட சென்னை பகுதியிலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பலர் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் வசித்து வந்த முகமது சப்ரீஸ் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதேபோன்று மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கோவை கார் வெடிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் இன்றைய சோதனையின் போது போலீசுக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர்களை குறி வைத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது. சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்குள்ளாகி இருக்கும் 5 பேரையும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது.

    • பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில் நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்கள் தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

    சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இருப்புபாதை எல்லைக்குட்பட்ட மெட்டூர் ரெயில்வேபாலம் மற்றும் முருகன்பட்டி ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஸ்குமார், போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளை சோதனை நடத்தி அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    ஏதேனும் சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர். இன்று மாலை வரை இந்த சோதனை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    முத்துப்பேட்டை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் அந்தந்த மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, அனந்தபத்மநாதன், உதயா, ஹேமலதா மற்றும் போலீசார் அரசகுளம் தெற்கு கரை பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட போலீசார் இந்நியாஸ், சாஜித், அசாருதீன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.

    தொடர்ந்து 4 பேர் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இன்று சோதனை செய்யப்பட்ட ரிஸ்வான் உள்பட 4 பேரின் வீடுகளிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து ஒரு இயக்கத்துடன் தொடர்புஉள்ளதாக கூறி கைது செய்ததும், பின்னர் அவர்கள் விடுதலை ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    ×