என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட போலீசார்.
மங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவம் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
- கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
குள்ளனம்பட்டி:
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப்பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் உடைமைகள், நடைமேடை, கார் பார்க்கிங், பார்சல், ஆட்டோ ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.






