search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து விபத்து"

    • பின்பகுதியில் மற்றொரு பேருந்து மோதியால் விபத்து ஏற்பட்டது
    • பேருந்தில் இருந்த 30 பயணிகள் உயிர்தப்பினர்

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இது மின்சாரத்தில் இயங்கும் இ-பேருந்தாகும். இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பேருந்து பூந்தமல்லியையடுத்த பாப்பாசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி உயிர்தப்பினர்.

    இதற்கிடையே அருகில் இருந்தவர்கள், அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி, தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ கட்டுக்குள் வருவதுபோல் இருந்தது.

    பேட்டரியில் இயங்கும் பேருந்து என்பதால், ஸ்பார்க்காகி தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமாகியது.

    அதனைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 40 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தூரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கனமழை காரணமாக வளைவு ஒன்றில் திரும்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    மாவட்டத் தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஃபர்னாகேடி கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கச்ரோட் காவல் நிலையப் பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

    இந்த விபத்தில் நடத்துனர் உட்பட இருவர் பேருந்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பயணி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், இந்த விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேருந்தில் அளவிற்கு அதிகமான பயணிகள்
    • வளைவில் வேகமாக சென்றபோது விபத்திற்கு உள்ளானது

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்க நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் வந்து கொண்டிருந்தனர்.

    பேருந்து ஷெய்குபுராவில் உள்ள கன்கா டோக்ரான் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென கவிழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

    அளவுக்கு அதிகமானோர் பேருந்தில் பயணம் செய்ததும், வளைவான பகுதியில் டிரைவர் வேகமாக சென்றதும் விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1949-ம் ஆண்டில் இருந்து அன்னை மேரி பிறந்த தினம் கொண்டாட்டம் தேசிய மரியன்னை ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது. மேரியமாபாத் அன்னை மேரி நகராக அறியப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி வேன் ஒன்று எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதி, தீப்பிடித்து எரிந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

    • விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றபோது அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல், பலியானர்வர்களின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது விபத்து.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அந்நாட்டில் உள்ள பல ஏழை குடிமக்கள் கிராமப்புறங்களில் பயணம் செய்ய மினிபஸ்களைப் பயன்படுத்துகின்றனர்.

    மொராக்கோவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை இறப்புகள் மற்றும் 12,000 காயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தேசிய சாலை பாதுகாப்பு அமைப்பின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 10 இறப்புகள் பதிவாகின்றன.

    • புகை வருவதை கவனித்த டிரைவர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
    • மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று காலையில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நார்போலியில் இருந்து சேந்தனி கோலிவாடா பகுதிக்கு சென்ற அந்த பேருந்து காலை 8.30 மணியளவில் மத்திய மைதானத்தின் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது.

    என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை கவனித்த டிரைவர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.  பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    • லாரியை முந்தி செல்ல முயன்றபோது விபத்து
    • காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

    புல்தான் மாவட்டத்தின் மல்காபுர் நகரில் உள்ள மேம்பாலத்தில் அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் ஒரு பேருந்தில், ஹிங்கோலி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நாஷிக் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, லாரியை முந்தி செல்ல முயன்றபோது, ஹிங்கோலி நோக்கி சென்ற பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததால் விபத்து.

    வங்காளதேசத்தில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாஷர் ஸ்மிருதி பரிபாஹன் என்ற பேருந்து நேற்று காலை 9 மணியளவில் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து புறப்பட்டது. அப்போது 10 மணியளவில் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டாவில் உள்ள சாலையோர குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததே விபத்துக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    மேலும், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    17 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    டயமர் மாவட்டத்தில் உள்ள தளிச்சி பகுதிக்கு அருகே காரகோரம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் கண்டறிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

    • பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
    • காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

    பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, பொக்ரான் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக சங்கரா காவல் நிலையத்தின் (ஜெய்சால்மர்) உதவி சப் இன்ஸ்பெக்டர் கைலாஷ் சந்த் கூறினார்.

    காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் உள்ளூர் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

    வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    விபத்து குறித்து, ஜோத்பூர் ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறுகையில், "ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக ஜோத்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். ஆனால் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்ட ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார்" என்றார்.

    • விபத்தில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். அப்போது, செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர்.

    "முதற்கட்ட எண்ணிக்கையின்படி, 27 பேர் இறந்தனர் மற்றும் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்தார்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார்.
    • விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது.

    இதில் சொகுசு பேருந்து தீப்பிடித்தது. பேருந்துக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் கருகி பலியானார்கள். இந்த கோர விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார். இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இன்று புல்தானாவில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்க உள்ளோம். சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல.

    விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

    ×