search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமைப்பெண்"

    • நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றாகும்.
    • கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்ட மாகும். நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றா கும். அடுத்த தலைமுறை களுக்கு கல்வி என்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இளம் தலைமுறையி னர்கள்அதிக அளவில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர வேண்டும் என்ப தற்காக புதுமைப்பெண் திட்டம் அறிவித்து மாணவி களின் வங்கிகணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தி வருகிறார். இளைஞர்கள் படித்த பின் வேலை கிடைக்க வேண்டும் என்ப தால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் உயர்கல்வி தொடர முடி யாத நிலையில் உள்ள மாண வர்களுக்காக இந்த கல்விகடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 கல்லூரி கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவி களுக்கு கல்வி கடன் பெறுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கல்வி கடன் வழங்குவதற்கான மாபெரும் முகாம் நடத்தப் பட்டது. கல்வி மிகவும் இன்றியமையாத தாகும் எனவே மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கல்வி கடன் முகாமில், சுமார் 472 மாணவ, மாணவி களுக்கு ரூ.17.35 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் வழங்கப் பட்டது. இம்முகாமில் துர்காதேவி என்ற மாணவி யின்கல்வி கடன் விண்ணப் பம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சில காரணங்களால் மறுக்கப் பட்டதாக அறிந்த மாவட்ட கலெக்டர் இந்தி யன் வங்கியின் வாயி லாக ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன்கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், கடலூர்மண்டல இந்தியன் வங்கி மேலாளர் கவுரிசங்கர் ராவ், சேலம் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமேலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கள்ளக்குறிச்சி வருவாய் தாசில்தார் பிரபா கரன், வருவாய் துறை அல வலர்கள், வங்கிமேலா ளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது, 

    புதுமைப் பெண் திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார். மேலும் அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர்

    கடலூர்:

    :கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் உயர்கல்வி பயி லும் அரசு பள்ளி மாணவி களின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை அதிகரிக்கவும், பொருளா தாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவி களுக்கு உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் வாயி லாக மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்குவதால், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகி தத்தை குறைத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவி களுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், மேலும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல சமுதாயத்தை உரு வாக்க வழிவகை செய்யப்படு கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறுகிறார்கள்.
    • இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கோவை,

    அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

    கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்த வும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில், முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்கு வழங்க ஆய்வு பணிகள் நடந்து வந்தது.அனைத்து கல்லூரி களிலும் இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக 'புதுமைப் பெண்' திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாண விகள் பயன்பெறும் வகையில் 'புதுமைப்பெண்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழக கலையரங்கத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை யினை, கலெக்டர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இந்த திட்டத்தில் கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 3000 மாணவிகள் பயனடைந்தனர்.

    இன்று நடந்த விழாவில் இரண்டாவது கட்டமாக 17 கல்லூரிகளைச் சேர்ந்த 1008 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, கல்லூரிகளின் கல்வி இயக்குனர் கலைச்செல்வி, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • கல்வித்துறை மற்றும் வங்கியில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தனியார் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து பின்னர் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும், தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி படிக்கும் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக http://penkalvi.tn.gov.in வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி - திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முதல்கட்டமாக மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 40 கல்லூரிகளில் இருந்து 3 ஆயிரத்து 257 மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வீதம் வருடத்துக்கு மொத்தம் ரூ.3 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    இரண்டாவது கட்டமாக மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 3 ஆயிரத்து 91 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெற அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். கல்வித்துறை மற்றும் வங்கியில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    ×